ருசியான பச்சை மிளகு குழம்பு‌ ஒரு தரம் வீடே மணக்க மணக்க செய்து கொடுத்து பாருங்க!

- Advertisement -

தினமும் என்ன சமையல் செய்வது என்று தெரியாமல் புலம்புகிறீர்களா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? ஆனால் நல்ல சுவையான ஒரு குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பச்சை மிளகு குழம்பு செய்யுங்கள். உங்கள் வீட்டில் உள்ளோர் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மிளகு குழம்பு பல வகைகளில் செய்யலாம். பூண்டு சேர்த்தது, சின்ன வெங்காயத்தில் தாளித்தது, மிளகு அரைத்தது என பலவகைகளில் செய்யலாம். செட்டிநாடு மிளகு குழம்பு ருசிக்கும் ஐயர் வீட்டு மிளகு குழம்பு ருசிக்கும் பல வித்தியாசங்கள் இருக்கும். இன்று இந்த பதிவில் ஈஸியாக எல்லோர் வீடுகளிலும் பொதுவாக செய்யக்கூடிய பச்சை மிளகு குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம். வீட்டில் காய்கறி இல்லாவிட்டாலும், வீட்டில் இருக்கக்கூடிய மசாலா பொருட்களை, அரைத்து, பச்சை மிளகு சேர்த்து மிகவும் குறைந்த நேரத்தில் காரசாரமாக இந்த குழம்பை செய்து விடலாம்.

-விளம்பரம்-

இந்த குழம்பு இரைப்பை குடல் வலி, குடல் வாயு மற்றும் பிற வயிற்று தொடர்பான ஜீரண பிரச்சனைகளை சீர் செய்யும். மேலும் இந்த பச்சை மிளகில் அழற்சி எதிர்ப்பு, ஆன்டி ஆக்சிடென்ட், கிருமி எதிர்ப்பு திறன் அதிகமாக உள்ளது. அதனால் சளி, காய்ச்சலை விரட்டும் தன்மை உள்ளது. அதேபோல் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும். பனிக்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு இருக்கும். இந்த நேரத்தில் இந்த பச்சை மிளகு குழம்பு செய்து சாப்பிட்டால் அனைத்தும் சரியாகும். குழந்தைகள் எந்த உணவில் மிளகை சேர்த்தாலும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இப்படி குழம்பு வைத்து கொடுத்தால் வேணாம் என்றே சொல்ல மாட்டார்கள். இந்த குழம்பை வைத்து விட்டு சுடச்சுட சோறு வடித்து விட்டால் போதும். தொட்டுக்கொள்ள ஒரு வத்தல்! அவ்வளவு தான், எல்லா சாப்பாடும் வயிற்றுக்குள் எப்படி போனது என்பதே தெரியாமல் போய்விடும். இந்த ‌குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

- Advertisement -
Print
No ratings yet

பச்சை மிளகு குழம்பு‌ | Green Pepper Kulambu Recipe In Tamil

தினமும் என்ன சமையல் செய்வது என்று தெரியாமல் புலம்புகிறீர்களா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? ஆனால் நல்ல சுவையான ஒரு குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பச்சை மிளகு குழம்பு செய்யுங்கள். உங்கள் வீட்டில் உள்ளோர் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மிளகு குழம்பு பல வகைகளில் செய்யலாம். பூண்டு சேர்த்தது, சின்ன வெங்காயத்தில் தாளித்தது, மிளகு அரைத்தது என பலவகைகளில் செய்யலாம். செட்டிநாடு மிளகு குழம்பு ருசிக்கும் ஐயர் வீட்டு மிளகு குழம்பு ருசிக்கும் பல வித்தியாசங்கள் இருக்கும். இன்று இந்த பதிவில் ஈஸியாக எல்லோர் வீடுகளிலும் பொதுவாக செய்யக்கூடிய பச்சை மிளகு குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம். வீட்டில் காய்கறி இல்லாவிட்டாலும், வீட்டில் இருக்கக்கூடிய மசாலா பொருட்களை, அரைத்து, பச்சை மிளகு சேர்த்து மிகவும் குறைந்த நேரத்தில் காரசாரமாக இந்த குழம்பை செய்து விடலாம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Green Pepper Kulambu
Yield: 4 People
Calories: 57kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 4 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் கசகசா
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1/4 கப் சின்ன வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 1/4 கப் புளி கரைசல்
  • கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

  • முதலில் பச்சை மிளகு தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும்.‌ பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் சீரகம், சோம்பு, கசகசா, தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  • பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, வற்றல் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நறுக்கிய வெங்காயம், பூண்டு பச்சை மிளகு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா, மிளகாய்த்தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
  • பின் புளி கரைசல் சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு கொதிக்க விடவும். குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி விடவும்.
  • அவ்வளவுதான் மிகவும் ருசியான பச்சை மிளகு குழம்பு தயார். இந்த குழம்பு ருசியாக இருப்பது மட்டுமின்றி, ஜலதோஷம், இருமலுக்கு அருமருந்து.

Nutrition

Serving: 400g | Calories: 57kcal | Carbohydrates: 4.4g | Protein: 8.7g | Fat: 0.2g | Sodium: 2.4mg | Potassium: 27mg | Fiber: 1.8g | Vitamin A: 2IU | Vitamin C: 23mg | Calcium: 6mg | Iron: 22mg

இதனையும் ‌படியுங்கள் : மணக்க மணக்க சூப்பரான மிளகு சாதம் இப்படி செய்து பாருங்கள் அருமையாக இருக்கும்!!!