Advertisement
சட்னி

இட்லி தோசைக்கு ருசியான சட்னி இனி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

Advertisement

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, என மாற்றி மாற்றி இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த வேர்கடலை சட்னியை செய்து பாருங்கள்.

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் பீட்ரூட் சட்னி செய்வது எப்படி ?

Advertisement

மேலும் ருசி என்று எடுத்துக் கொண்டால கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். இந்த வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

வேர்க்கடலை சட்னி | Groundnut Chutney Recipe in Tamil

Print Recipe
வேர்க்கடலையில் பரிப்டோபான் என்ற அமினா அமிலம் செரட் டோனின் என்ற மூளை பகுதியை உற்சாகப்படுத்துகிறது. மேலும் வேர்க்கடலை மூளை வளர்ச்சிக்கும் ஞாபகம் சக்தியே வளர்ப்பதற்கும் உதவியாக இருப்பதால் உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு இந்த சட்னியை செய்து குடுங்கள் மேலும் ருசி என்று எடுத்துக் கொண்டால கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். இந்த வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
Course chutney
Cuisine Indian, TAMIL
Advertisement
Keyword Groundnut Chutney, வேர்க்கடலை சட்னி
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 people
Calories 567

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

  • 1 கப் வேர்க்கடலை
  • ¼ கப் பொறிக்கடலை
  • எண்ணெய் தேவையான அளவு
  • 3 பல் பூண்டு
  • 6 பச்சை மிளகாய்
  • புளி நெல்லிக்காய் அளவு
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க

  • எண்ணெய் தேவையான அளவு
  • ½ tbsp கடுகு
  • ¼ tbsp உளுந்தம் பருப்பு
  • கருவேப்பிலை சிறிது
  • 2 வர மிளகாய்

Instructions

  • முதலில் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு
    Advertisement
    எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடேறும் வரை காத்திருந்து என்னை சூடேறியதும் நாம் வைத்திருக்கும் நிலக்கடலை பொட்டுக்கடலை இரு பொருட்களையும் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.
  • நிலக்கடலை பொன்னிறமாக வந்த பின் இதனுடன் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வறுக்கவும் அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியதும் கடாயை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து சிறிது நேரம் குளிர வையுங்கள்.
  • நம் வறுத்த வைத்த பொருட்கள் குளிர்ந்த உடன் மிக்ஸி ஜாரில் போட்டு திருதிருவன அரைத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு புளி சேர்த்து, அதனுடன் சிறுது தண்ணீர் சேர்த்து விழுது போல் மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • பின் மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள் என்னை சூடு ஏறியதும் கடுகு, கருவேப்பிலை, உளுந்தம் பருப்பு, வர மிளகாய் ஆகிய பொருள்களை சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ளவும்.
  • பின்பு சட்னியை ஜாரில் இருந்து வேறு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு நாம் செய்த தாளிப்பை சட்னியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் இப்பொழுது ருசியான நிலக்கடலை சட்னி இனிதே தயாராகி விட்டது.

Nutrition

Calories: 567kcal | Carbohydrates: 16g | Protein: 26g | Saturated Fat: 7g | Sodium: 18mg | Potassium: 705mg | Sugar: 4g
Advertisement
Prem Kumar

Recent Posts

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

5 மணி நேரங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

7 மணி நேரங்கள் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

7 மணி நேரங்கள் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

8 மணி நேரங்கள் ago

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

13 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

13 மணி நேரங்கள் ago