- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, chutney, dinner
நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி, மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பீட்ரூட் சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். இந்த பீட்ரூட் சட்னியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும், எண்ணெய் சூடேறியதும் உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம் மிளகாய் வத்தல் போன்றவற்றை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்பு வறுத்து எடுத்த இந்த பொருட்களை ஒரு பவுளில் போட்டு ஆற வைத்து விடுங்கள் பின் மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள்.
எண்ணெய் சூடேறியவுடன் பீட்ரூட்டை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு ஐந்து நிமிடம் பீட்ரூட்டை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள், பீட்ரூட் வதக்கிய பின் அனுடன் தேங்காய் சேர்த்து நாம் ஏற்கனவே வறுத்து எடுத்து வைத்துள்ள பொருட்கள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.
பின்பு கடாய் இறக்கி பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு சூடு ஆறும் வரை காத்திருங்கள் சூடு ஆரியவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மை போல அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த பீட்ரூட்டை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்பு கடாயை அடுப்பில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியவுடன் கடுகு, கருவேப்பிலை, உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல் சேர்த்து தாளிக்கவும்.
அதற்கு பின் தாளித்ததை பீட்ரூட் சட்னியுடன் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளுங்கள் உப்பு பற்றவில்லை என்றால் சிறிதளவு போட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் சட்னி இனிதே தயாராகி விட்டது.






