- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- chutney
நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, என மாற்றி மாற்றி இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த வேர்கடலை சட்னியை செய்து பாருங்கள்.
இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் பீட்ரூட் சட்னி செய்வது எப்படி ?
மேலும் ருசி என்று எடுத்துக் கொண்டால கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். இந்த வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
Ingredients
Method
முதலில் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடேறும் வரை காத்திருந்து என்னை சூடேறியதும் நாம் வைத்திருக்கும் நிலக்கடலை பொட்டுக்கடலை இரு பொருட்களையும் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.
நிலக்கடலை பொன்னிறமாக வந்த பின் இதனுடன் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வறுக்கவும் அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியதும் கடாயை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து சிறிது நேரம் குளிர வையுங்கள்.
நம் வறுத்த வைத்த பொருட்கள் குளிர்ந்த உடன் மிக்ஸி ஜாரில் போட்டு திருதிருவன அரைத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு புளி சேர்த்து, அதனுடன் சிறுது தண்ணீர் சேர்த்து விழுது போல் மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
பின் மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள் என்னை சூடு ஏறியதும் கடுகு, கருவேப்பிலை, உளுந்தம் பருப்பு, வர மிளகாய் ஆகிய பொருள்களை சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ளவும்.
பின்பு சட்னியை ஜாரில் இருந்து வேறு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள்.
அதன் பின்பு நாம் செய்த தாளிப்பை சட்னியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் இப்பொழுது ருசியான நிலக்கடலை சட்னி இனிதே தயாராகி விட்டது.






