Advertisement
காலை உணவு

இட்லி, பூரி, சப்பாத்திக்கு ஒர முறை இப்படி வேர்க்கடலைக் குழம்புக் கறி ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

பெரும்பாலும் பெண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனையை இந்த குழம்பு தான். இன்று இந்த குழம்பு செய்து விட்டு நாளை என்ன செய்வது என்று யோசிப்பதே பெரும் பிரச்சனை இப்படி இருக்கையில் சமைக்க வீட்டில் காய்கறி எதுவும் இல்லாத பட்சத்தில் கேட்கவே வேண்டாம். பெரிய போராட்டமே நடந்து விடும். அப்படியான சூழ்நிலையை எளிதில் சமாளிக்க அட்டகாசமான இந்த குழம்பை செய்து அசத்தலாம்.

வேர்க்கடலையில் குழம்பு செய்திருக்கிறீர்களா?  வேர்க்கடலை இருந்தால் போதும், சூப்பரான குழம்பு ரெடி! நீங்களும் செஞ்சு பாருங்க. வேர்க்கடலை அனைவருக்கும் பிடித்தமான ஒரு பொருள் ஆகும். இதை வைத்து பல விதங்களில் நாம் சாப்பிட்டு இருப்போம் ஆனால் குழம்பு செய்து சாப்பிட்டு இருப்போமா? என்று கேட்டால் மிகவும் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் தான் ‘ஆம்’ என்று சொல்ல நேரிடும். சுவையான வேர்க்கடலை குழம்பு நீங்களும் இதே மாதிரி செஞ்சு பாருங்க, இனி அடிக்கடி செய்வீங்க! வீட்டில் சமைக்க காய்கறி எதுவுமே இல்லாத சமயத்தில் குழம்பாம சட்டுன்னு அட்டகாசமான இந்த குழம்பை செஞ்சுருங்க.

Advertisement

இட்லி தோசை பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஒரே மாதிரி குருமா, கிரேவி, சட்னி, செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக வேர்க்கடலையையும் வைத்து இப்படி ஒரு குழம்புக் கறி செய்து பாருங்கள். இது கொஞ்சம் வித்தியாசமான குழம்புக் கறி தான். ஆனால், சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.  சத்து நிறைந்த வேர்க்கடலையை குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்து பாருங்கள். விரும்பி சாப்பிடுவார்கள். ருசியான வேர்க்கடலை குழம்பு எளிதாக செய்வது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வேர்க்கடலைக் குழம்புக் கறி | Groundnut Curry Recipe In Tamil

Print Recipe
வேர்க்கடலையில் குழம்பு செய்திருக்கிறீர்களா?  வேர்க்கடலை இருந்தால் போதும், சூப்பரான குழம்பு ரெடி!
Advertisement
நீங்களும் செஞ்சு பாருங்க. வேர்க்கடலை அனைவருக்கும் பிடித்தமான ஒரு பொருள் ஆகும்.இதை வைத்து பல விதங்களில் நாம் சாப்பிட்டு இருப்போம் ஆனால் குழம்பு செய்து சாப்பிட்டுஇருப்போமா? என்று கேட்டால் மிகவும் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் தான் ‘ஆம்’ என்று சொல்ல நேரிடும். சுவையான வேர்க்கடலைகுழம்பு நீங்களும் இதே மாதிரி செஞ்சு பாருங்க, இனி அடிக்கடி செய்வீங்க! வீட்டில் சமைக்ககாய்கறி எதுவுமே இல்லாத சமயத்தில் குழம்பாம சட்டுன்னு அட்டகாசமான
Advertisement
இந்த குழம்பை செஞ்சுருங்க. இட்லி தோசை பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளஒரே மாதிரி குருமா, கிரேவி, சட்னி, செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக வேர்க்கடலையையும்வைத்து இப்படி ஒரு குழம்புக் கறி செய்து பாருங்கள். இது கொஞ்சம் வித்தியாசமான குழம்புக்கறி தான். ஆனால், சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.  சத்து நிறைந்த வேர்க்கடலையை குழந்தைகளுக்கு இப்படிசெய்து கொடுத்து பாருங்கள். விரும்பி சாப்பிடுவார்கள். ருசியான வேர்க்கடலை குழம்புஎளிதாக செய்வது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
Course Breakfast, dinner, Gravy
Cuisine tamil nadu
Keyword Groundnut Curry
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 7.5

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கப் நிலக் கடலை
  • 10 சின்ன வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 கிராம்பு
  • 1 இலவங்கப்பட்டை
  • 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி
  • 1 டீஸ்பூன் பூண்டு
  • எண்ணெய் சிறிதளவு
  • 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • மஞ்சள் தூள் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • 2 கப் தண்ணீர்

Instructions

  • நிலக்கடலையை உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைத்து இறக்கி வைத்துக்கொள்ளவும்.
  • பின்னர், ஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி, அரைத்த வெங்காயத்துடன் நறுமணப் பொருள்கள் சேர்த்துபொன் நிறமாகும் வரை வதக்க வேண்டும்.
  • அதன் பிறகு ஏற்கனவே, வேக வைத்த நிலக்கடலையை ஒரு பாத்திரத்தில் வைத்து தண்ணீர். மஞ்சள் சேர்த்துமிதமான சூட்டில் 5 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.
  • இதனுடன் சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். தேவைப்பட்டால் உப்புசேர்க்கலாம்.
  • இதன் மீதுதேங்காய்த் துருவல்களை தூவி சாப்பாடு மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

Nutrition

Serving: 100g | Calories: 7.5kcal | Carbohydrates: 7.5g | Protein: 6.5g | Fat: 13g | Fiber: 2.5g
Advertisement
Prem Kumar

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

17 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

21 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

23 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago