ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் வேண்டும் என உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள்!!!

இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவில் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் உண்டு என்றால் அ

By ·

இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவில் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் உண்டு என்றால் அது மிகை அல்ல. பிரியாணிகளில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, ஃபிஷ் பிரியாணி, இறால் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி, மற்றும் பன்னீர் பிரியாணி மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி. சமீப காலமாக பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது.

பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப்படுவதுண்டு. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, ஃபிஷ் பிரியாணி, மற்றும் இறால் பிரியாணி எவ்வாறோ சைவ பிரியர்களுக்கு மஷ்ரூம் பிரியாணி, மற்றும் பன்னீர் பிரியாணி. மாமிசங்களை சேர்த்து செய்யப்படும் பிரியாணி அளவிற்கு இதில் புரதச்சத்து இல்லை என்றாலும் இதில் நாம் பல விதமான காய்கறிகளை சேர்த்து செய்வதால் வெஜிடபிள் பிரியாணியும் உடம்புக்கு நல்லது தான்.‌ நான் வெஜ் சாப்பிடாத, காய்கறி பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டதே வெஜிடபிள் பிரியாணி ஆகும். வாருங்கள் இந்த ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இதனையும் படியுங்கள் : சுவையான பன்னீர் நாண் இனி ஹோட்டல் சென்று சாப்பிடாமல் வீட்டிலேயே எளிய‌ முறையில் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை