- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவில் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் உண்டு என்றால் அது மிகை அல்ல. பிரியாணிகளில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, ஃபிஷ் பிரியாணி, இறால் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி, மற்றும் பன்னீர் பிரியாணி மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி. சமீப காலமாக பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது.
பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப்படுவதுண்டு. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, ஃபிஷ் பிரியாணி, மற்றும் இறால் பிரியாணி எவ்வாறோ சைவ பிரியர்களுக்கு மஷ்ரூம் பிரியாணி, மற்றும் பன்னீர் பிரியாணி. மாமிசங்களை சேர்த்து செய்யப்படும் பிரியாணி அளவிற்கு இதில் புரதச்சத்து இல்லை என்றாலும் இதில் நாம் பல விதமான காய்கறிகளை சேர்த்து செய்வதால் வெஜிடபிள் பிரியாணியும் உடம்புக்கு நல்லது தான். நான் வெஜ் சாப்பிடாத, காய்கறி பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டதே வெஜிடபிள் பிரியாணி ஆகும். வாருங்கள் இந்த ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
இதனையும் படியுங்கள் : சுவையான பன்னீர் நாண் இனி ஹோட்டல் சென்று சாப்பிடாமல் வீட்டிலேயே எளிய முறையில் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!
Ingredients
Method
முதலில் பன்னீர் மற்றும் பிரெட் துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பின் நீள வாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு அதனுடன் எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்ததும் பாசுமதி அரிசியை சேர்த்து உதிரியாக வடித்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.
பின் நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும். அதனுடன் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி, அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து காய்கறிகள் நன்கு வேகும் வரை கொதிக்க விடவும்.
காய்கறிகள் நன்கு வெந்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா, தயிர் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பின் இந்த கிரேவியை வடித்து வைத்துள்ள பாசுமதி சாதத்தில் சேர்க்கவும். அதன் மேல் பொறித்து வைத்துள்ள பன்னீர், பிரெட் துண்டுகள், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து அதன் மேல் சிறிது கொத்தமல்லி, புதினா, மற்றும் நெய் சேர்த்து கிளறி மிதமான தீயில் 2 நிமிடங்கள் வைத்து எடுத்தால் சுவையான ஹோட்டல் ஸ்டைல் வெஜ் பிரியாணி தயார்.






