ஹைதராபாத் உணவுகள் அப்படின்னு சொன்னாலே அதுல முதல் இடமா படிக்கிற உணவு பிரியாணி தான். பிரியாணி ஆர்டர் பண்ணும் அப்டின்னு முடிவு பண்ணிட்டாங்க அப்படினா அவங்க வாங்குறதுல முதலிடம் பிடித்த பிரியாணி ஹைதராபாத் பிரியாணி தான். அப்படி ஹைதராபாத் உணவுகளுக்குன்னு தனியாக ஒரு கூட்டமே இருக்கு. இதுல சைவ உணவுகள் அசைவ உணவுகளுக்கு அடிமையாக நிறைய பேர் இருக்கிறார்கள்.
அப்படியே ஹைதராபாத் உணவுகளுக்கு விருப்பப்படுற கூட்டத்துல பிரியாணி, ஆவக்காய் ஊறுகாய், கோங்குரா சட்னி ,பருப்பு நெய், அப்படின்னு அதிக அளவுக்கு உணவு பட்டியல் போய்க்கொண்டே இருக்கும். காரசாரமான உணவுகளுக்கு ஆந்திரா உணவுகள் முதலிடம் பிடிக்கின்றன. அப்படி சுவையான உணவுகளை தயார் செய்கிற ஹைதராபாத் உணவுகளில் இப்போ நம்ம சாப்பிட போறது ஹைதராபாத் பேமஸான அப்பல்லோ சிக்கன். இந்த ஹைதராபாத் சிக்கன் ரொம்ப சுவையாவும் ஈசியாவும் வீட்டிலேயே நம்ம எப்படி செய்யறது அப்படிங்கறது தெரிஞ்சுக்க இருக்கோம்.
இந்த ஹைதராபாத் சிக்கன் செய்வது ரொம்ப ரொம்ப சுலபம். இப்படி எல்லாருக்கும் பிடிச்சமான இந்த அப்பல்லோ சிக்கன நம்ம வீட்ல செய்து கொடுக்கும்போது வீட்ல இருக்குற குழந்தைகள் இருந்து வயசானவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். இப்போ இந்த ஹைதராபாத் பேமஸ் அப்பல்லோ சிக்கன் எப்படி வீட்ல சுலபமா தயார் செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
ஹைதராபாத் அப்பல்லோ சிக்கன் | Hyderabad Apollo Chicken Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ சிக்கன்
- 1 ஸ்பூன் மிளகாய்தூள்
- 1/2 ஸ்பூன் மல்லிதூள்
- 1/2 ஸ்பூன் சீரகதூள்
- 1/2 ஸ்பூன் கரமசாலா தூள்
- 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 ஸ்பூன் மைதா மாவு
- 1 ஸ்பூன் சோளமாவு
- 1 முட்டை
- 2 பச்சைமிளகாய்
- 5 பல் பூண்டு
- 1 வெங்காயம்
- 1 ஸ்பூன் தயிர்
- 1 ஸ்பூன் சீனி
- கொத்தமல்லி சிறிதளவு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் சிக்கனை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த சிக்கனில் உள்ள எலும்புகளை நீக்கி விட்டு வெறும் சதைப்பகுதியை மட்டும்நீளவாக்கில் நறுக்கி பயன்படுத்துவதற்காக எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து வைத்துள்ள எலும்பு இல்லாத சிக்கனை சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதில் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.பிறகுகரம் மசாலா, உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பிசறி கொள்ள வேண்டும்.
- பிறகு அதில் மைதா மாவு, சோள மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.ஒரு முட்டையை எடுத்து நன்றாகஅடித்துக் கொள்ள வேண்டும் அதை கலந்து வைத்துள்ள சிக்கனில் சேர்த்து நன்றாக கலந்து தனியாகஎடுத்து வைக்கவும்.
- பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்சேர்த்து மசாலாவில் கலந்து ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு இருபுறமும்நல்ல சிவந்து வருமாறு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.இவ்வாறு அனைத்து சிக்கன் துண்டுகளையும்பொறுத்தெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துநன்றாக வதக்கிக் கொள்ளவும்.பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்துவதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் மஞ்சள்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சீரகத்தூள், சிறிதளவு உப்பு சேர்க்க நன்றாக கலந்துவிடவும்.பிறகு அதில் எடுத்து வைத்துள்ள தயிர், சீனியை சேர்த்து நன்றாக கலந்து விட்டுபின்பு அதில் பொரித்தெடுத்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி விடவும்.
- சிக்கன் மசாலாக்களுடன்நன்றாக கலந்து வருமாறு கிளறிவிட்டு இறக்கி மேலே கொத்தமல்லி தலை தூவி பரிமாறினால் ருசியானஹைதராபாத் அப்பல்லோ சிக்கன் தயார்.