Home அசைவம் ஹைதராபாத் அப்பல்லோ இறால் வறுவல் இப்படி செய்தால் கொஞ்சம் கூட மிச்சமாகாது! வீட்டிலும் அடிக்கடி செய்து...

ஹைதராபாத் அப்பல்லோ இறால் வறுவல் இப்படி செய்தால் கொஞ்சம் கூட மிச்சமாகாது! வீட்டிலும் அடிக்கடி செய்து தர சொல்லி கேட்பார்கள்!

ஹைதராபாத் உணவுகள்ள ரொம்பவே பேமஸா செய்யக்கூடிய ஒரு உணவு அப்படின்னு பாத்தீங்கன்னா அது அப்பல்லோ உணவுகள் தான். அதாவது உணவுகள் அப்படின்னா அப்போலோ சிக்கன், அப்பல்லோ மட்டன், அப்பல்லோ இறால் அப்படின்னு ஒரு பேரு வச்சு அதுல நிறைய வெரைட்டி ஆஃப் நான்வெஜ் பண்ணிட்டு இருக்காங்க. இன்னைக்கு நம்ம பாக்க போறது அப்பல்லோ இறால் வறுவல் எப்படி பண்றது. ரொம்பவே சுவையா இருக்கும் இது சிக்கன்ல பண்றது விட அப்பல்லோ இறால் வறுவல் பண்ணா அவ்வளவு நல்லா இருக்கும்.

-விளம்பரம்-

சொல்லப்போனால் இது கே எஃப் சி சிக்கன் மாதிரியான ஒரு டேஸ்ல தான் இருக்கும் இந்த இறால் வறுவல். அதுக்கப்புறம் நம்ம ஒரு சின்ன ஃப்ரை பண்ணினோம்னா மொத்தமா அப்பல்லோ வறுவல் ரெடி ஆயிரும். அந்த மாதிரி நீங்க வெறும் பொரிச்சதுக்கு அப்புறம் மட்டும் கொடுக்கணும் அப்படின்னா கூட நீங்க குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. கேஎஃப்சி இறால் மாதிரி இருக்கு அப்படின்னு சொல்லிட்டு வாங்க. உங்களுக்கு இந்த அப்பல்லோ இறால் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.இந்த சுவையான இறால் வருவல் அப்படியே வறுத்து சாப்பிடுவதற்கு அவ்வளவு சுவையா இருக்கும்.

இது தயிர் சாதம், ரச சாதத்தோட சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சூப்பரா இருக்கும். இந்த இறால் வறுவல நீங்க தயிர் சாதத்துக்கு கூட வச்சு சாப்பிட்டீங்கன்னு வச்சுக்கோங்களேன் உங்களுக்கு அவ்வளவு பிடிக்கும். இந்த அப்பல்லோ இறால் வறுவல் செய்ய கொஞ்சம் பெரிய இறால வாங்கிக்கிட்டீங்கன்னா தான் உங்களுக்கு இது வறுவல் பண்ணி சாப்பிடுவதற்கு நல்லா இருக்கும். குட்டி குட்டி இறாலா இருந்துச்சுன்னா உங்களுக்கு ரொம்பவே டைம் எடுக்குற மாதிரி ஒரு பீலா இருக்கும் . அதனால நீங்க கொஞ்சம் பெரிய இறாலா வாங்கிட்டு இதை மாதிரி பண்ணி பார்த்தீங்கன்னா அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த அப்பல்லோ இறால் வறுவல். இந்த அப்பல்லோ இறால் வறுவல் செய்து கொடுக்கும்போது குழந்தைங்க அவ்வளவு விரும்பி சாப்பிடுவாங்க . கேஎஃப்சி இறால் மாதிரி இருக்கு அப்படின்னு சொல்லிட்டு வாங்க. உங்களுக்கு இந்த அப்பல்லோ இறால் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 2 votes

ஹைதராபாத் அப்பல்லோ இறால் வறுவல் | Hyderabad apollo prawn fry in tamil

இந்த சுவையான ஈஹைதராபாத். அப்பல்லோ இறால் வருவல் அப்படியே வறுத்து சாப்பிடுவதற்கு அவ்வளவு சுவையா இருக்கும். இது தயிர் சாதம், ரச சாதத்தோட சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சூப்பரா இருக்கும். இந்த இறால் வறுவல நீங்க தயிர் சாதத்துக்கு கூட வச்சு சாப்பிட்டீங்கன்னு வச்சுக்கோங்களேன் உங்களுக்கு அவ்வளவு பிடிக்கும். இந்த அப்பல்லோ இறால் வறுவல் செய்ய கொஞ்சம் பெரிய இறால வாங்கிக்கிட்டீங்கன்னா தான் உங்களுக்கு இது வறுவல் பண்ணி சாப்பிடுவதற்கு நல்லா இருக்கும்.
Prep Time15 minutes
Active Time20 minutes
Total Time35 minutes
Course: Fry, starters
Cuisine: Hyderabad
Keyword: Hyderabad Apollo chicken, Hyderabad Apollo Prawn
Yield: 6 People
Calories: 650kcal
Cost: 250

Equipment

  • 2 கடாய்
  • 2 கரண்டி
  • 2 பவுள்

தேவையான பொருட்கள்

  • 12 இறால்
  • 1 முட்டை
  • 2 ஸ்பூன் மைதா மாவு
  • 2 ஸ்பூன் சோளமாவு
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 12 ஸ்பூன் மல்லிதூள்
  • 14 ஸ்பூன் கரமசாலா
  • 14 ஸ்பூன் சீரகத்தூள்
  • 1 ஸ்பூன் மிளகு தூள்
  • 2 ஸ்பூன் சீனி
  • 1 ஸ்பூன் சில்லி சாஸ்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 வெங்காயம்
  • 15 பல் பூண்டு
  • 14 கப் குடைமிளகாய்
  • 2 பச்சைமிளகாய்
  • சிறிதளவு கொத்தமல்லி
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

  • முதலில் இறாலை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் பிறகு அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பிறகு இதில் கரம் மசாலா தூள், மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் சீனி சேர்த்து நன்றாக கலந்து விடவும். பின் இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து விட்டு அதில் மைதா மாவு ஒரு ஸ்பூன் சோள மாவு ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • இந்த கலவையில் இறுதியாக ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து விட்டு கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • இறால் கால் மணி நேரம் ஊறிய பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து இறாலை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும்.
  • பின் ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் மைதா மாவு, ஒரு ஸ்பூன் சோள மாவு சேர்த்து இரண்டையும் நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • எண்ணெய் காய்ந்ததும் பிசறி வைத்துள்ள இறால்களை இந்த சோளமாவு மைதா மாவு கலவையில் நன்றாக பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் இறால் நன்றாக வெந்து வரும் பொரித்த இறால்களை எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு அனைத்தையும் செய்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
  • பிறகு அதில் குடை மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்பு இதில் சில்லி சாஸ் சேர்த்து நன்றாக கலந்து விட்டு சீனி சேர்த்து கலந்து விட வேண்டும். இப்போது இதில் பொரித்து வைத்துள்ள இறால்களல சேர்த்து கலந்து விட்டு கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறினால் சுவையான அப்பல்லோ இறால் தயார்.

Nutrition

Calories: 650kcal | Carbohydrates: 70.9g | Protein: 32.2g | Fat: 27.3g