Advertisement
அசைவம்

வீடே மணக்க மணக்க ஹைதராபாத் சிக்கன் கிரேவி இனி இப்படி செய்து பாருங்க!

Advertisement

பொதுவாக நாம் அனைவருக்குமே அசைவ உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அசைவ உணவினை மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்து விரும்பி சாப்பிடுவது சிக்கன் தான். அசைவ பிரியர்கள் அனைவரின் உணவு பட்டியலிலும் இந்த சிக்கன் இடம் பெற்றிருக்கும். அப்படி அசைவ பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த சிக்கனை ஒரே முறையிலேயே செய்து சுவைத்து சலித்து போய்விட்டதா. அப்படி என்றால் இன்றைய பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் மிகவும் சுவையான ஹைதராபாத் சிக்கன் கிரேவி செய்வது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்வோம். எந்த ஒரு சாப்பாட்டிற்கும் சிக்கன் வச்சு சாப்பிடும் பழக்கம் நம்ம எல்லாருக்குமே இருக்கும். அப்படி இந்த ஹைதராபாத் ஸ்டைலில் சிக்கன் கிரேவி எல்லாருக்கும் பிடிக்கும்.

நிறைய சிக்கன் சைடிஸ்கள் இருந்தாலும் 65 , வறுவல், தந்தூரிகள் எப்படி பல வகைகளில் சிக்கனில் இருந்தாலும், மசாலாக்கள் இருந்தாலும் இந்த ஹைதராபாத் சிக்கன் கிரேவி ஒரு டைம் நீங்க ட்ரை பண்ணி பார்த்தீங்கனா உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். சுவையான இந்த ஹைதராபாத் சிக்கன் கிரேவி நீங்க செஞ்சு கொடுக்கும்போது உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். சிக்கன் வகைகளில் நிறைய உள்ளன. அவற்றில் ஒரு சில வகைகளுக்கு என்று பிரியர்கள் இருப்பார்கள். இப்போது அந்த சிக்கன் வகைகளில் ஒன்றான ஹைதராபாத் சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Advertisement

ஹைதராபாத் சிக்கன் கிரேவி | Hyderabad Chicken Gravy Recipe In Tamil

Print Recipe
பொதுவாக நாம் அனைவருக்குமே அசைவ உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அசைவ உணவினை மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்து விரும்பி சாப்பிடுவது சிக்கன் தான். அசைவ பிரியர்கள் அனைவரின் உணவு பட்டியலிலும் இந்த சிக்கன் இடம் பெற்றிருக்கும். அப்படி அசைவ பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த சிக்கனை ஒரே முறையிலேயே செய்து சுவைத்து சலித்து போய்விட்டதா. அப்படி என்றால் இன்றைய பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் மிகவும் சுவையான ஹைதராபாத் சிக்கன் கிரேவி செய்வது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்வோம். எந்த
Advertisement
ஒரு சாப்பாட்டிற்கும் சிக்கன் வச்சு சாப்பிடும் பழக்கம் நம்ம எல்லாருக்குமே இருக்கும். அப்படி இந்த ஹைதராபாத் ஸ்டைலில் சிக்கன் கிரேவி எல்லாருக்கும் பிடிக்கும்.
Course LUNCH
Cuisine Hyderabad, Indian
Keyword Hyderabad Chicken Gravy
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 99.93

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 கரண்டி

Ingredients

  • 1/2 கி சிக்கன்
  • 150 கி பெரிய வெங்காயம்
  • 2 டேபிள் ஸ்பூன் வறுத்த வெங்காயம்
  • 2 டேபிள் ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
    Advertisement
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 4 டேபிள் ஸ்பூன் தயிர்
  • 1/4 கப் தேங்காய் பால்
  • 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு
  • 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி தழை
  • 2 டீஸ்பூன் தனியா தூள்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் சிக்கனுடன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள், வறுத்த வெங்காயம், மஞ்சள்தூள், தயிர் சேர்த்து நன்கு கலந்து 1மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்த சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும். பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  • சிக்கன் வெந்ததும் தேங்காய்ப்பால், பொட்டுக்கடலை மாவு, கரம் மசாலா தூள், மிளகு தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளவும்.
  • பின் தண்ணீர் சுண்டி வந்ததும் கசூரி மேத்தி, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான ஹைதராபாத் சிக்கன் கிரேவி தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 99.93kcal | Carbohydrates: 13.9g | Protein: 3.49g | Fat: 1.79g | Sodium: 54.8mg | Potassium: 77.9mg | Fiber: 1.27g | Vitamin A: 295IU | Vitamin C: 606mg | Calcium: 24.7mg | Iron: 2.21mg

இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை ஹைதராபாத் ஸ்டைல் முட்டை கிரேவி இப்படி செஞ்சி பாருங்க! ஒரு சொட்டு கிரேவி கூட மிஞ்சாது!

Advertisement
Prem Kumar

Recent Posts

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

5 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

6 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

10 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

19 மணி நேரங்கள் ago