Home அசைவம் வீடே மணக்க மணக்க ஹைதராபாத் சிக்கன் கிரேவி இனி இப்படி செய்து பாருங்க!

வீடே மணக்க மணக்க ஹைதராபாத் சிக்கன் கிரேவி இனி இப்படி செய்து பாருங்க!

பொதுவாக நாம் அனைவருக்குமே அசைவ உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அசைவ உணவினை மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்து விரும்பி சாப்பிடுவது சிக்கன் தான். அசைவ பிரியர்கள் அனைவரின் உணவு பட்டியலிலும் இந்த சிக்கன் இடம் பெற்றிருக்கும். அப்படி அசைவ பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த சிக்கனை ஒரே முறையிலேயே செய்து சுவைத்து சலித்து போய்விட்டதா. அப்படி என்றால் இன்றைய பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் மிகவும் சுவையான ஹைதராபாத் சிக்கன் கிரேவி செய்வது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்வோம். எந்த ஒரு சாப்பாட்டிற்கும் சிக்கன் வச்சு சாப்பிடும் பழக்கம் நம்ம எல்லாருக்குமே இருக்கும். அப்படி இந்த ஹைதராபாத் ஸ்டைலில் சிக்கன் கிரேவி எல்லாருக்கும் பிடிக்கும்.

-விளம்பரம்-

நிறைய சிக்கன் சைடிஸ்கள் இருந்தாலும் 65 , வறுவல், தந்தூரிகள் எப்படி பல வகைகளில் சிக்கனில் இருந்தாலும், மசாலாக்கள் இருந்தாலும் இந்த ஹைதராபாத் சிக்கன் கிரேவி ஒரு டைம் நீங்க ட்ரை பண்ணி பார்த்தீங்கனா உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். சுவையான இந்த ஹைதராபாத் சிக்கன் கிரேவி நீங்க செஞ்சு கொடுக்கும்போது உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். சிக்கன் வகைகளில் நிறைய உள்ளன. அவற்றில் ஒரு சில வகைகளுக்கு என்று பிரியர்கள் இருப்பார்கள். இப்போது அந்த சிக்கன் வகைகளில் ஒன்றான ஹைதராபாத் சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Print
5 from 1 vote

ஹைதராபாத் சிக்கன் கிரேவி | Hyderabad Chicken Gravy Recipe In Tamil

பொதுவாக நாம் அனைவருக்குமே அசைவ உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அசைவ உணவினை மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்து விரும்பி சாப்பிடுவது சிக்கன் தான். அசைவ பிரியர்கள் அனைவரின் உணவு பட்டியலிலும் இந்த சிக்கன் இடம் பெற்றிருக்கும். அப்படி அசைவ பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த சிக்கனை ஒரே முறையிலேயே செய்து சுவைத்து சலித்து போய்விட்டதா. அப்படி என்றால் இன்றைய பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் மிகவும் சுவையான ஹைதராபாத் சிக்கன் கிரேவி செய்வது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்வோம். எந்த ஒரு சாப்பாட்டிற்கும் சிக்கன் வச்சு சாப்பிடும் பழக்கம் நம்ம எல்லாருக்குமே இருக்கும். அப்படி இந்த ஹைதராபாத் ஸ்டைலில் சிக்கன் கிரேவி எல்லாருக்கும் பிடிக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Hyderabad, Indian
Keyword: Hyderabad Chicken Gravy
Yield: 4 People
Calories: 99.93kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1/2 கி சிக்கன்
  • 150 கி பெரிய வெங்காயம்
  • 2 டேபிள் ஸ்பூன் வறுத்த வெங்காயம்
  • 2 டேபிள் ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 4 டேபிள் ஸ்பூன் தயிர்
  • 1/4 கப் தேங்காய் பால்
  • 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு
  • 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி தழை
  • 2 டீஸ்பூன் தனியா தூள்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் சிக்கனுடன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள், வறுத்த வெங்காயம், மஞ்சள்தூள், தயிர் சேர்த்து நன்கு கலந்து 1மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்த சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும். பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  • சிக்கன் வெந்ததும் தேங்காய்ப்பால், பொட்டுக்கடலை மாவு, கரம் மசாலா தூள், மிளகு தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளவும்.
  • பின் தண்ணீர் சுண்டி வந்ததும் கசூரி மேத்தி, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான ஹைதராபாத் சிக்கன் கிரேவி தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 99.93kcal | Carbohydrates: 13.9g | Protein: 3.49g | Fat: 1.79g | Sodium: 54.8mg | Potassium: 77.9mg | Fiber: 1.27g | Vitamin A: 295IU | Vitamin C: 606mg | Calcium: 24.7mg | Iron: 2.21mg

இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை ஹைதராபாத் ஸ்டைல் முட்டை கிரேவி இப்படி செஞ்சி பாருங்க! ஒரு சொட்டு கிரேவி கூட மிஞ்சாது!