இடியாப்பம் ப்ரை, காலை மதியம் இரவு என எந்த வேலைகளில் வேணாலும் உணவாக எடுத்துக் கொள்ளலாம்!!!

ஆவியில் வேக வைத்து உண்ணும் உணவான இடியாப்பம் நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஆவியில் வேக வைத்து நாம் உண்ணும் உணவான இட்லி இடியாப்பம் புட்டு என அனைத்துமே ஆரோக்கியமானது தான்.ஆனால் இடியாப்பம் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலானது காரணம் நமது இனிப்பாகவும் சைடு டிஷ் வைத்து உண்ணலாம் காரமாகவும்

By Prem Kumar · 19/3/2024

ஆவியில் வேக வைத்து உண்ணும் உணவான இடியாப்பம் நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஆவியில் வேக வைத்து நாம் உண்ணும் உணவான இட்லி இடியாப்பம் புட்டு என அனைத்துமே ஆரோக்கியமானது தான்.ஆனால் இடியாப்பம் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலானது காரணம் நமது இனிப்பாகவும் சைடு டிஷ் வைத்து உண்ணலாம் காரமாகவும் சைட் டிஷ் வைத்து உண்ணலாம்.

ஒரு சிலருக்கு வியாபத்திற்கு தேங்காய் பால் மிகவும் பிடிக்கும் ஒரு சிலருக்கு ஆட்டுக்கால் பாயா, வெஜிடபிள் குருமா என காரமான சைடிஷ் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். ஒரு சிலர் லெமன் இடியாப்பம் தக்காளி இடியாப்பம் என செய்து சாப்பிடுவார்கள். ஆனால் இன்று நாம் காய்கறிகள் எல்லாம் வைத்து ஒரு இடியாப்பம் ஃப்ரை எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம்.

ஒருவேளை காலையில் செய்த இடியாப்பம் மீதமாகிவிட்டால் இரவில் இந்த இடியாப்பம் ஃப்ரை செய்து கொடுத்தால் இடியாப்பம் வீணாகவும் ஆகாது அதே நேரத்தில் ஹெல்தியான ஒரு டின்னர் ஆகவும் நமக்கு அமையும். இந்த இடியாப்பம் சரி செய்வதற்கு குறைவான நேரம் மட்டுமே இருந்தால் போதும். காய்கறிகள் வெட்டுவதற்கு மட்டுமே நமக்கு நேரம் தேவைப்படும். இந்த சுவையான இடியாப்பம் ஃப்ரை நாம் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கூட கொடுத்து விடலாம். அந்த அளவிற்கு சுவையான வயிறும் நிரம்பக் கூடிய ஒரு உணவாக இது அமையும். இப்ப வாங்க இந்த சுவையான இடியாப்பம் சரி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு ருசியான கோதுமை இடியாப்பம் இப்படி சுலபமாக செஞ்சு பாருங்க! பின் நீங்களே அடிக்கடி செய்வீங்க!

Recipes AMP · Quick view
View full