Advertisement
சைவம்

இட்லி மாவு மீதம் ஆகிவிட்டால் இந்த இட்லி மாவு கொழுக்கட்டை செஞ்சு பாருங்க‌!

Advertisement

நமக்கு ஒரு சில நேரத்துல ஏதாவது சூடா ஸ்வீட்டா ஸ்நாக்ஸ் சாப்பிடணும் அப்படின்னு தோணும். ஈவினிங் ஸ்கூல் விட்டு வர குழந்தைகளுக்கும் சூடா ஏதாவது செஞ்சு தரணும் அப்படின்னு நினைப்போம் ஆனால் சில சமயங்கள்ல நம்ம வீட்டுல பெரிதாக ஏதோ இருக்காது அந்த நேரத்துல வீட்ல இட்லி மாவு மட்டும் ஒரு கப் இருந்தா போதும் அதை வைத்து சூப்பரான ஆவியில் வேகவைத்த சத்தான ஒரு கொழுக்கட்டை செஞ்சு கொடுக்கலாம்.

அது சாப்பிட்டு கண்டிப்பா உங்க வீட்ல இருக்கிறவங்க எல்லாரும் உங்களை பாராட்டுவாங்க குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க. உங்களுக்கும் ஒரு மன நிறைவு கிடைக்கும் அந்த அளவுக்கு ஒரு சூப்பரான அட்டகாசமான கொழுக்கட்டை தான் இந்த இட்லி மாவு கொழுக்கட்டை. ரொம்ப குறைவான பொருட்களை வைத்து செய்யப் போற இந்த சூப்பரான ரெசிபி போக போக உங்களோட ஃபேவரட் கூட மாறிப்போயிடும். சில சமயங்கள்ல நம்ம வீட்டுல ஆட்டு விக்கிற மாவு புளிச்சு போயிடும்.

Advertisement

அதுல இட்லி தோசைனு எது செஞ்சாலும் நல்லாவே இருக்காது. அந்த மாதிரி நேரத்துல அந்த இட்லி மாவை தூக்கி கீழே ஊத்தாம சூப்பரான இந்த கொழுக்கட்டை செய்யலாம். நெய் ஊத்தி இந்த கொழுக்கட்டையை நம்ம செய்றதால மணமா வாசனையா சாப்பிடுவதற்கு அவ்வளவு ஒரு ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்டான இட்லி மாவு கொழுக்கட்டை சீக்கிரமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்

இட்லி மாவு கொழுக்கட்டை | Idly Mavu Kozhukattai In Tamil

Print Recipe
சில நேரத்துல ஏதாவது சூடா
Advertisement
ஸ்வீட்டா ஸ்நாக்ஸ் சாப்பிடணும் அப்படின்னு தோணும். ஈவினிங் ஸ்கூல் விட்டுவர குழந்தைகளுக்கும் சூடா ஏதாவது செஞ்சு தரணும் அப்படின்னு நினைப்போம் ஆனால் சில சமயங்கள்லநம்ம வீட்டுல பெரிதாக ஏதோ இருக்காது அந்த நேரத்துல வீட்ல இட்லி மாவு மட்டும் ஒரு கப்இருந்தா போதும் அதை வைத்து சூப்பரான ஆவியில் வேகவைத்த சத்தான ஒரு கொழுக்கட்டை செஞ்சுகொடுக்கலாம். நெய் ஊத்தி இந்த
Advertisement
கொழுக்கட்டையை நம்ம செய்றதால மணமாவாசனையா சாப்பிடுவதற்கு அவ்வளவு ஒரு ருசியா இருக்கும்.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Idly Mavu Kozhukattai
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 105

Equipment

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 கப் இட்லி மாவு
  • 1/2 கப் வெல்லம்
  • 2 ஏலக்காய்
  • 10 முந்திரிபருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துண்டுகள்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 சிட்டிகை உப்பு

Instructions

  • ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் முந்திரி பருப்பு மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வறுக்கவும்
  • பிறகு அதே கடாயில் இட்லி மாவை சேர்த்து அனைத்தும் ஒன்று சேரும் வரை நன்றாக கலந்து கெட்டியாகும் வரை கிளறவும்
  • வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறி எடுத்து லேசாக ஆரம்பித்து பிறகு அதனை பிடி கொழுக்கட்டைகளாக செய்து கொள்ளவும்
  • ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்தால் சுவையான இட்லி மாவு கொழுக்கட்டை தயார்

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 12g | Protein: 3g | Fat: 0.33g | Calcium: 3.1mg | Iron: 0.26mg

இதையும் படியுங்கள் : இந்த 4 பொருள் போதும் ருசியான கம்மங்கொழுக்கட்டை வீட்டிலயே ஈஸியாக செய்து விடலாம் அவசியம் ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement
Ramya

Recent Posts

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

2 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

12 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

19 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

23 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

2 நாட்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

2 நாட்கள் ago