இந்த 4 பொருள் போதும் ருசியான கம்மங்கொழுக்கட்டை வீட்டிலயே ஈஸியாக செய்து விடலாம் அவசியம் ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

இன்று நாம் மாலை நேரம் ஸ்னாக்ஸாக சாப்பிடுவதற்கும் சாமி கும்பிடும் போது சாமிக்கு பிரசாதமாகவும் வைக்கக்கூடிய வகையில் ஒரு கொழுக்கட்டை ரெசிப்பி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம் இன்று நாம் கம்மங்கொழுக்கட்டை தான் செய்து பார்க்கப் போறோம் இது ஸ்னாக்ஸாக சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு இந்த ராகி கொழுக்கட்டை நாம் உடலுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

-விளம்பரம்-

அதே சமயத்தில் நம் நாவிற்கு நல்ல சுவையையும் தரும் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் இதை மிகவும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த கம்மங்கொழுக்கட்டை இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். ஆகையால் இன்று இந்த கம்மங்கொழுக்கட்டை எப்படி செய்வது, என்று இந்த தொகுப்பில் நாம் காணலாம்.

- Advertisement -
Print
5 from 1 vote

கம்மங்கொழுக்கட்டை | Kambu Kozhukattai Recipe In Tamil

நாம் மாலை நேரம்ஸ்னாக்ஸாக சாப்பிடுவதற்கும் சாமி கும்பிடும் போது சாமிக்கு பிரசாதமாகவும் வைக்கக்கூடியவகையில் ஒரு கொழுக்கட்டை ரெசிப்பி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம் இன்று நாம்கம்மங்கொழுக்கட்டை தான் செய்து பார்க்கப் போறோம் இது ஸ்னாக்ஸாக சாப்பிடுவதற்கு ஏற்றஉணவு இந்த கம்மங்கொழுக்கட்டைநாம் உடலுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதே சமயத்தில் நம் நாவிற்கு நல்ல சுவையையும் தரும்உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் இதை மிகவும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த கம்மங்கொழுக்கட்டைஇருக்கும்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Kambu Kozhukattai
Yield: 4
Calories: 55kcal

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 இட்லி பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ கம்பு
  • 1 மூடி துருவிய தேங்காய்
  • 200 கிராம் வெல்லம்
  • 4 ஏலக்காய்

செய்முறை

  • முதலில் கம்பை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு, புடைத்தால், மேல் தோல் முழுதும் வந்து விடும்
  • வெறும்வாணலியில் இட்டு, கம்பு சிவக்கும் வரை வறுக்கவும். வறுத்த கம்பை நைசாக அரைக்கவும்.
  • பின்பு வெல்லத்தை தூளாக்கி, 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, லேசாக கொதிக்க வைக்கவும்.கம்பு மாவு, தேங்காய், பொடித்த ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.
  •  
    அதில் வெல்லப்பாகை ஊற்றி கிளறவும். ஆறியபின், கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும்.பிடித்த கொழுக்கட்டைகளை இட்லிப்பானையில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். பின்பு பரிமாறவும்.

Nutrition

Serving: 5nos | Calories: 55kcal | Carbohydrates: 21g | Protein: 2.9g | Fiber: 3g

இப்படியும் படியுங்கள் : காலை டிபனுக்கு கமகமனு ருசியான பாம்பே ஸ்டைல் பன்னீர் ஊத்தாப்பம் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!