காலை டிபனுக்கு கமகமனு ருசியான பாம்பே ஸ்டைல் பன்னீர் ஊத்தாப்பம் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

- Advertisement -

ஊத்தாப்பம் அப்படினாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். கடைகள்ல ஊத்தாப்பங்கள் வாங்கி சாப்பிடாத ஆட்களே இருக்க மாட்டாங்க. ரொம்ப அழகா வடிவேல் சார் கூட எப்படி ஊத்தாப்பம் பண்ணனும்னு  ஒரு காமெடியில் சொல்லி இருக்காங்க. அந்த மாதிரி சுவையான ஒரு பன்னீர் ஊத்தாப்பம் ரவையில் செய்ய போறோம். இதை எப்படி ரொம்ப சுவையா பாம்பே ஸ்டைலில் பன்னீர் ஊத்தாப்பம் செய்வது அப்படிங்கறத பாக்க இருக்கோம்.

-விளம்பரம்-

இந்த ஊத்தாப்பத்துக்கு கொத்தமல்லி சட்னி வச்சு சாப்பிடும்போது அவ்வளவு ஒரு சுவையா இருக்கும். இந்த ஊத்தாப்பத்தை வீட்ல செய்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஹெல்தியாவும் இருக்கும் அதே நேரம் பிடிச்ச மாதிரியான ஒரு உணவாகவும் இருக்கும். ரவைல உப்புமா செய்து கொடுக்கும்போது யாருமே சாப்பிட மாட்டாங்க. இந்த மாதிரி ரவையில் ஊத்தாப்பம் இல்லன்னா தோசை ஊத்தி கொடுக்கும் போது எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.

- Advertisement -

அது என்னமோ ரவையில் ஊத்தாப்பம் செய்த போது பிடிக்கிற நமக்கு அதுல உப்புமா செய்தா பிடிக்க மாட்டேங்குது. இந்த பன்னீர் ரவை ஊத்தாப்பத்த ரொம்பவே சுவையாவும் நிறைய காய்கறிகள் எல்லாம் சேர்த்து ஹெல்தியாவும் செய்து சாப்பிட போறோம். குழந்தைகளுக்கு காய்கறிகள் சாப்பிட பிடிக்காது. குழந்தைகளுக்கு இந்த மாதிரி உணவுகளில் காய்கறிகளை சேர்த்து கொடுக்கும் பொழுது அவங்க வித்தியாசமா இருக்கு அப்படின்னு சொல்லி விரும்பி சாப்பிடுவாங்க. அப்படி சுவையா சாப்பிடுவதற்கு  ரவையில் இந்த ஊத்தாப்பத்தை பன்னீர் சுலபமாக எப்படி பண்றது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
3 from 2 votes

பாம்பே பன்னீர் ஊத்தாப்பம் | Bombay Paneer Uthappam Recipe In Tamil

ரவையில் ஊத்தாப்பம் செய்த போது பிடிக்கிற நமக்கு அதுல உப்புமா செய்தா பிடிக்க மாட்டேங்குது. இந்த பன்னீர் ரவை ஊத்தாப்பத்த ரொம்பவே சுவையாவும் நிறைய காய்கறிகள் எல்லாம் சேர்த்து ஹெல்தியாவும் செய்து சாப்பிட போறோம். குழந்தைகளுக்கு காய்கறிகள் சாப்பிட பிடிக்காது. குழந்தைகளுக்கு இந்த மாதிரி உணவுகளில் காய்கறிகளை சேர்த்து கொடுக்கும் பொழுது அவங்க வித்தியாசமா இருக்கு அப்படின்னு சொல்லி விரும்பி சாப்பிடுவாங்க. அப்படி சுவையா சாப்பிடுவதற்கு  ரவையில்இந்த ஊத்தாப்பத்தை பன்னீர் சுலபமாக எப்படி பண்றது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: Breakfast
Cuisine: bombay
Keyword: Bombay Paneer Uthappam
Yield: 4
Calories: 105kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் ரவை
  • 1/2 கப் தயிர்
  • 1 வெங்காயம்
  • 2 பச்சைமிளகாய்
  • 1/2 கப் கேரட்
  • 1/2 கப் குடைமிளகாய்
  • 1/2 கப் பீட்ரூட்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 கப் பன்னீர்
  • 1 ஸ்பூன் ஓமம்
  • 1 ஸ்பூன் கடுகு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவையை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் தயிரை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு மீண்டும்  மாவிற்குதேவையான அளவு நீர் சேர்த்து கலந்து தனியாக வைத்து விட வேண்டும்.
  •  பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், ஓமம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
  •  
     பிறகு அதில் பொடியாக நறுக்கிய கேரட், குடைமிளகாய் , பீட்ரூட்டை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயின் காரம் போதவில்லை என்றால் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம் இது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.
  • பிறகு நன்றாக துருவி வைத்துள்ள பன்னீரை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். காய்கறிகளை நன்றாக கலந்து விட்டு காய்கறிக்கு தேவையான அளவு உப்பு மட்டும் சேர்த்து நன்றாக கலந்து ஒரு ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும்.
  • பிறகு கலந்து வைத்துள்ள ரவையில் தயார் செய்து வைத்துள்ள இந்த காய்கறி மசாலாக்களை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்பொழுது ரவை காய்கறி மாவு கெட்டியாக இருந்தால் ஊத்தாப்பம் ஊத்துவதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் தோசை கல்லில் வைத்து இந்த ரவை கலந்த காய்கறிகளை ஊத்தாப்பங்களாக வார்த்து ஒருபுறம் வெந்த பிறகு மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து  கொத்தமல்லிசட்னியோடு பரிமாறினால் சூடான சுவையான பாம்பே ஸ்டைல் பன்னீர் ஊத்தாப்பம் தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 105kcal | Carbohydrates: 12g | Protein: 4g | Fat: 0.33g | Calcium: 3.1mg