இட்லி மாவு மீதம் ஆகிவிட்டால் இந்த இட்லி மாவு கொழுக்கட்டை செஞ்சு பாருங்க‌!

- Advertisement -

நமக்கு ஒரு சில நேரத்துல ஏதாவது சூடா ஸ்வீட்டா ஸ்நாக்ஸ் சாப்பிடணும் அப்படின்னு தோணும். ஈவினிங் ஸ்கூல் விட்டு வர குழந்தைகளுக்கும் சூடா ஏதாவது செஞ்சு தரணும் அப்படின்னு நினைப்போம் ஆனால் சில சமயங்கள்ல நம்ம வீட்டுல பெரிதாக ஏதோ இருக்காது அந்த நேரத்துல வீட்ல இட்லி மாவு மட்டும் ஒரு கப் இருந்தா போதும் அதை வைத்து சூப்பரான ஆவியில் வேகவைத்த சத்தான ஒரு கொழுக்கட்டை செஞ்சு கொடுக்கலாம்.

-விளம்பரம்-

அது சாப்பிட்டு கண்டிப்பா உங்க வீட்ல இருக்கிறவங்க எல்லாரும் உங்களை பாராட்டுவாங்க குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க. உங்களுக்கும் ஒரு மன நிறைவு கிடைக்கும் அந்த அளவுக்கு ஒரு சூப்பரான அட்டகாசமான கொழுக்கட்டை தான் இந்த இட்லி மாவு கொழுக்கட்டை. ரொம்ப குறைவான பொருட்களை வைத்து செய்யப் போற இந்த சூப்பரான ரெசிபி போக போக உங்களோட ஃபேவரட் கூட மாறிப்போயிடும். சில சமயங்கள்ல நம்ம வீட்டுல ஆட்டு விக்கிற மாவு புளிச்சு போயிடும்.

- Advertisement -

அதுல இட்லி தோசைனு எது செஞ்சாலும் நல்லாவே இருக்காது. அந்த மாதிரி நேரத்துல அந்த இட்லி மாவை தூக்கி கீழே ஊத்தாம சூப்பரான இந்த கொழுக்கட்டை செய்யலாம். நெய் ஊத்தி இந்த கொழுக்கட்டையை நம்ம செய்றதால மணமா வாசனையா சாப்பிடுவதற்கு அவ்வளவு ஒரு ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்டான இட்லி மாவு கொழுக்கட்டை சீக்கிரமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
No ratings yet

இட்லி மாவு கொழுக்கட்டை | Idly Mavu Kozhukattai In Tamil

சில நேரத்துல ஏதாவது சூடா ஸ்வீட்டா ஸ்நாக்ஸ் சாப்பிடணும் அப்படின்னு தோணும். ஈவினிங் ஸ்கூல் விட்டுவர குழந்தைகளுக்கும் சூடா ஏதாவது செஞ்சு தரணும் அப்படின்னு நினைப்போம் ஆனால் சில சமயங்கள்லநம்ம வீட்டுல பெரிதாக ஏதோ இருக்காது அந்த நேரத்துல வீட்ல இட்லி மாவு மட்டும் ஒரு கப்இருந்தா போதும் அதை வைத்து சூப்பரான ஆவியில் வேகவைத்த சத்தான ஒரு கொழுக்கட்டை செஞ்சுகொடுக்கலாம். நெய் ஊத்தி இந்த கொழுக்கட்டையை நம்ம செய்றதால மணமாவாசனையா சாப்பிடுவதற்கு அவ்வளவு ஒரு ருசியா இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Idly Mavu Kozhukattai
Yield: 4
Calories: 105kcal

Equipment

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் இட்லி மாவு
  • 1/2 கப் வெல்லம்
  • 2 ஏலக்காய்
  • 10 முந்திரிபருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துண்டுகள்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 சிட்டிகை உப்பு

செய்முறை

  • ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் முந்திரி பருப்பு மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வறுக்கவும்
  • பிறகு அதே கடாயில் இட்லி மாவை சேர்த்து அனைத்தும் ஒன்று சேரும் வரை நன்றாக கலந்து கெட்டியாகும் வரை கிளறவும்
  • வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறி எடுத்து லேசாக ஆரம்பித்து பிறகு அதனை பிடி கொழுக்கட்டைகளாக செய்து கொள்ளவும்
  • ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்தால் சுவையான இட்லி மாவு கொழுக்கட்டை தயார்

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 12g | Protein: 3g | Fat: 0.33g | Calcium: 3.1mg | Iron: 0.26mg

இதையும் படியுங்கள் : இந்த 4 பொருள் போதும் ருசியான கம்மங்கொழுக்கட்டை வீட்டிலயே ஈஸியாக செய்து விடலாம் அவசியம் ட்ரை பண்ணி பாருங்க!