இட்லி சாம்பார் எப்படி சொன்னாலே எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுவும் இட்லி கூட சாம்பார் ஊற்றி சாப்பிடுவது என்பது விருப்பமான ஒரு விஷயம்தான். இட்லி சாம்பார் வைப்பது எப்படி வேலை நிறைய இழுத்துட்டே போகுது அப்படின்னு கவலைப்படுறீங்களா அப்போ இந்த மாதிரியான இட்லி சாம்பார் உங்களுக்காகத்தான். ரொம்பவே சிம்பிளா காய்கறிகள் இல்லாம வெறும் தக்காளி வெங்காயத்தை வச்சு பருப்பு சேர்க்காமல் சுவையான ஒரு இட்லி சாம்பார் வைக்க போறோம்.
இந்த இட்லி சாம்பார் மட்டும் சாப்டீங்களா அது பருப்பு சாம்பார விட ரொம்பவே சுவையா இருக்கும். இந்த பருப்பு இல்லாத இட்லி சாம்பார் ரொம்பவே ஈஸியா சுலபமா வச்சிடலாம். வீட்ல தக்காளி வெங்காயம் சட்னி வச்சு வச்சு உங்க வீட்ல இருக்கவங்க எல்லாம் ரொம்ப போர் அடிச்சு போச்சா அப்போ அதே தக்காளி வெங்காயத்தை வைத்து இந்த பருப்பில்லாத இட்லி சாம்பார ரொம்ப ஈஸியா ஒரு பத்து பதினஞ்சு நிமிஷத்துக்குள்ள நீங்க பண்ணி முடிச்சிடலாம்.
அந்த அளவுக்கு சுவையாகவும் இருக்கும் ஈசியாவும் செய்து முடித்துவிடலாம் சுவையான பருப்பு இல்லாத இட்லி சாம்பார். இந்த சுவையான பருப்பில்லாத இட்லி சாம்பார் எல்லாருக்கு ரொம்ப பிடிக்கும். இதோட டேஸ்ல எல்லாரும் எப்பவுமே இந்த சாம்பார் தான் வேணும் அப்படின்னு சொல்லுவாங்க. அந்த அளவுக்கு ரொம்பவே ருசியா இருக்கும் இந்த பருப்பு இல்லாத இட்லி சாம்பார். இந்த சுவையான பருப்பு இல்லாத இட்லி சாம்பார் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
பருப்பு இல்லாத இட்லி சாம்பார் | Paruppu Illatha Idly Sambar Recipe in tamil
Equipment
- 1 குக்கர்
- 1 வாணலி
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 3 தக்காளி
- 2 வெங்காயம்
- 3 பச்சைமிளகாய்
- 6 பல் பூண்டு
- 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
- 1 ஸ்பூன் மிளகாய்தூள்
- 1/4 சிட்டிகை பெருங்காயதூள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் சீரகம்
- கொத்தமல்லி சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு குக்கரில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயதூள், மிளகாய் தூள் ,மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு விசில் வந்தவுடன் இறக்கி விட வேண்டும்.
- பிறகு வேக வைத்து எடுத்துள்ள தக்காளி , வெங்காயம், பச்சை மிளகாயை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அதில் மசித்து வைத்துள்ள தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
- பிறகு அதில் கொத்தமல்லி தழை தூவி ஒரு கொதி வந்த பிறகு இட்லியுடன் பரிமாறினால் சுவையான பருப்பு இல்லாத இட்லி சாம்பார் தயார்.