Advertisement
சைவம்

சுட சுட சாதத்துடன் சாப்பிட தெருவே மணக்க மணக்க ருசியான சீரக காரகுழம்பு இப்படி செய்து பாருங்கள்!

Advertisement

சீரகம் உடல் சூட்டைக் குறைக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும். இத்தகைய சீரகத்தை அடிக்கடி சமையலில் சேர்ப்பதைத் தவிர, சீரகத்தை கொண்டு குழம்பு செய்து சாப்பிடுவது இன்னும் நல்லது. உங்களுக்கு மதியம் என்ன குழம்பு செய்வதென்று தெரியவில்லையா? காய்கறிகள் எதுவும் இல்லையா? அப்படியானால் வீட்டில் சீரகம் இருந்தால் அதைக் கொண்டு ஒரு சுவையான காரகுழம்பு செய்யுங்கள். சீரக காரகுழம்பு ஒரு ஈஸியான வகையில் செய்து முடிக்கக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபி. அதிலும் சீரகம் மிகவும் பிடிக்கும் என்பவர்கள் இந்த ரெசிபியை வீட்டில் செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு ஆரோக்கியமானதும் கூட.

உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த சீரக காரகுழம்பு செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமாக இருக்கும். சூடான சாதத்தில் இந்த சீரகம் சேர்த்து செய்த காரகுழம்பை ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அடுத்தமுறை உங்களை இது போல் செய்து தர சொல்லி கேட்பார்கள். அஜூரண பிரச்சனை இருப்பவர்கள், பசி எடுக்காதவர்களுக்கு இந்த சீரக காரகுழம்பை செய்து சாப்பிடலாம். குழந்தை பிறந்தவர்களுக்கு மதியம் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து இந்த சீரக காரகுழம்பு பிசைந்து குடுத்தால் நல்லது. இன்று இந்த சீரக காரகுழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Advertisement

சீரக காரகுழம்பு | Jeera Kara Kulambu Recipe In Tamil

Print Recipe
சீரகம் உடல் சூட்டைக் குறைக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும். இத்தகைய சீரகத்தை அடிக்கடி சமையலில் சேர்ப்பதைத் தவிர, சீரகத்தைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடுவது இன்னும் நல்லது. உங்களுக்கு மதியம் என்ன குழம்பு செய்வதென்று தெரியவில்லையா? காய்கறிகள் எதுவும் இல்லையா? அப்படியானால் வீட்டில் சீரகம் இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான காரகுழம்பு செய்யுங்கள். சீரக காரகுழம்பு ஒரு ஈஸியான வகையில் செய்து முடிக்கக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபி. அதிலும் சீரகம் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், இந்த ரெசிபியை வீட்டில் செய்து சாப்பிட்டால் நன்றாக
Advertisement
இருக்கும். இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு ஆரோக்கியமானதும் கூட.
Course LUNCH
Cuisine Indian
Keyword Jeera Kara Kulambu
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 3 People
Calories 42

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 1/2 கப் பூண்டு
  • 2 தக்காளி
  • 1/2 கப் சீரகம்
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
    Advertisement
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • 1 துண்டு வெல்லம்
  • 1/2 கப் புளி கரைசல்

Instructions

  • முதலில் சீரகத்தை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். இது ஆறியதும் ஒரு மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், பூண்டு, கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி மசிந்து வந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • மசாலா வாசனை போனதும் புளி கரைசல் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்.
  • இது கொதித்ததும் மல்லித்தூள், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொதிக்க விடவும்.
  • குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் வறுத்து அரைத்து வைத்துள்ள சீரகத்தூளை சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு வெல்லம் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சீரக காரகுழம்பு தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 42kcal | Carbohydrates: 2.7g | Protein: 18g | Fat: 1.3g | Sodium: 168mg | Potassium: 17mg | Fiber: 1.5g | Vitamin A: 25IU | Vitamin C: 13mg | Calcium: 93mg | Iron: 36mg

இதனையும் படியுங்கள் : சுட சுட ருசியான மிளகு சீரக சாதம் ஒரு முறை இப்படி செய்து கொடுங்க! ஒரு பிடி சாதம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!

Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

40 நிமிடங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

8 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

19 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

21 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago