- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 3
- Cuisine
- Indian
- Course
- LUNCH
சீரகம் உடல் சூட்டைக் குறைக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும். இத்தகைய சீரகத்தை அடிக்கடி சமையலில் சேர்ப்பதைத் தவிர, சீரகத்தை கொண்டு குழம்பு செய்து சாப்பிடுவது இன்னும் நல்லது. உங்களுக்கு மதியம் என்ன குழம்பு செய்வதென்று தெரியவில்லையா? காய்கறிகள் எதுவும் இல்லையா? அப்படியானால் வீட்டில் சீரகம் இருந்தால் அதைக் கொண்டு ஒரு சுவையான காரகுழம்பு செய்யுங்கள். சீரக காரகுழம்பு ஒரு ஈஸியான வகையில் செய்து முடிக்கக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபி. அதிலும் சீரகம் மிகவும் பிடிக்கும் என்பவர்கள் இந்த ரெசிபியை வீட்டில் செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு ஆரோக்கியமானதும் கூட.
உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த சீரக காரகுழம்பு செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமாக இருக்கும். சூடான சாதத்தில் இந்த சீரகம் சேர்த்து செய்த காரகுழம்பை ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அடுத்தமுறை உங்களை இது போல் செய்து தர சொல்லி கேட்பார்கள். அஜூரண பிரச்சனை இருப்பவர்கள், பசி எடுக்காதவர்களுக்கு இந்த சீரக காரகுழம்பை செய்து சாப்பிடலாம். குழந்தை பிறந்தவர்களுக்கு மதியம் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து இந்த சீரக காரகுழம்பு பிசைந்து குடுத்தால் நல்லது. இன்று இந்த சீரக காரகுழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுட சுட ருசியான மிளகு சீரக சாதம் ஒரு முறை இப்படி செய்து கொடுங்க! ஒரு பிடி சாதம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!
Ingredients
Method
முதலில் சீரகத்தை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். இது ஆறியதும் ஒரு மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், பூண்டு, கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி மசிந்து வந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
மசாலா வாசனை போனதும் புளி கரைசல் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்.
இது கொதித்ததும் மல்லித்தூள், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் வறுத்து அரைத்து வைத்துள்ள சீரகத்தூளை சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு வெல்லம் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சீரக காரகுழம்பு தயார்.






