நல்லா கார சாரமான இந்த கார சோறு ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

- Advertisement -

நம்ம வீட்ல எந்த காய்கறியுமே இல்லை அப்படின்னா நம்ம எப்பவுமே தயிர் சாதம் புளி சாதம் லெமன் சாதம் இந்த மாதிரி தான் செஞ்சு சாப்பிடுவோம். ஆனா அந்த மாதிரி சாதம் செஞ்சு சாப்பிட்டு நமக்கு போரடித்திருக்கும் அவங்களுக்காக தான் இப்ப நம்ம இந்த கார சோறு பார்க்க போறோம். கார சோடா அப்படின்னா நிறைய மிளகாய் தூள் போட்டு ரொம்ப காரமா இருக்குமோ அப்படின்னு யோசிக்க வேணாம். இந்த கார சோறு காரசாரமாகவும் இருக்கும் அதே நேரத்தில் சாப்பிடுவதற்கு அதிகாரம் இல்லாமல் சாப்பிடறதுக்கு டேஸ்டாவும் இருக்கும்.

-விளம்பரம்-

இந்த கார சோறு கூட சைடு ஷா வச்சு சாப்பிட நமக்கு எதுவுமே தேவையில்லை வெறும் சாதனை சாப்பிடலாம் வேணும்னா அப்பளம் மட்டும் பொரிச்சு சேர்த்து சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். பேச்சிலரா இருக்கவங்க தனியா ரூம்ல ஸ்டே பண்ணி இருக்காங்க எல்லாருக்குமே இந்த கார சோறு ஒரு சூப்பரான ஈஸியான லஞ்ச் ஆக இருக்கும். இத உங்க குழந்தைகளுக்கும் கூட கொடுக்கலாம் கண்டிப்பா அவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க ஆனா கொஞ்சம் காரம் மட்டும் கம்மி பண்ணிக்கோங்க.

- Advertisement -

ரொம்பவே குறைவான பொருட்கள் வச்சு செய்யப் போற இந்த கார சோறு உங்க ஃபேவரட் ஆகவே மாறிடும். அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் சூப்பரா இருக்கும். ரொம்ப சிம்பிளா செய்யக்கூடிய இந்த கார சோறு சாப்பிடுவதற்கு ரொம்பவே அற்புதமான ஒன்னு. தக்காளி சாதம் புதினா சாதம் தயிர் சாதம் வரிசையில் இந்த கார சோறும் நீங்க சேர்த்துக்கலாம். இப்ப வாங்க இந்த சூப்பரான கார சோறு ஒரு பத்து நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
1 from 1 vote

கார சோறு | Kaara Soru Recipe In Tamil

கார சோறு கூட சைடு ஷா வச்சு சாப்பிட நமக்கு எதுவுமே தேவையில்லை வெறும் சாதனை சாப்பிடலாம் வேணும்னாஅப்பளம் மட்டும் பொரிச்சு சேர்த்து சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். பேச்சிலராஇருக்கவங்க தனியா ரூம்ல ஸ்டே பண்ணி இருக்காங்க எல்லாருக்குமே இந்த கார சோறு ஒரு சூப்பரானஈஸியான லஞ்ச் ஆக இருக்கும். இத உங்க குழந்தைகளுக்கும் கூட கொடுக்கலாம் கண்டிப்பா அவங்களும்விரும்பி சாப்பிடுவாங்க ஆனா கொஞ்சம் காரம் மட்டும் கம்மி பண்ணிக்கோங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான கார சோறு ஒரு பத்து நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Kaara Soru
Yield: 4
Calories: 155kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் வடித்த சாதம்
  • 1 டீஸ்பூன் நெய்
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் வேர்க்கடலை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சாதத்தை வடித்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு வேர்க்கடலை போட்டுதாளித்துக் கொள்ளவும்
  • விதைகளை நீக்கிய காய்ந்த மிளகாய் இரண்டு சிறியதாக வெட்டி சேர்த்துக் கொள்ளவும்.
  • பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மிளகாய் தூள் உப்பு பெருங்காயத்தூள் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும்.
     
  • இறுதியாக ஆறிய சாதத்தை போட்டு கிளறி எடுத்தால் சுவையான கார சோறு தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 155kcal | Carbohydrates: 210g | Protein: 210g | Fiber: 1g

இதையும் படியுங்கள் : சூப்பரான முடக்கத்தான் கீரை தோசை இப்படி மொறுகலா செய்து செஞ்சி கொடுத்தா எத்தனை தோசைனாலும் சாப்பிடுவாங்க!