காரசாரமான ருசியில் சூப்பரான காடை முட்டை தொக்கு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
நாட்டு கோழி முட்டையை விட காடை முட்டையில் அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. மதிய வேளையில் சுலபமாகவும் சத்துக்கள் நிறைந்ததாகவும் சமைக்க வேண்டும் என்றால் அதில் முக்கிய பங்கு வகிப்பது முட்டையும் ஒன்று. காடை முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளையின் செயல்பாட்டை தூண்டி ஞாபக சக்தியை அத
நாட்டு கோழி முட்டையை விட காடை முட்டையில் அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. மதிய வேளையில் சுலபமாகவும் சத்துக்கள் நிறைந்ததாகவும் சமைக்க வேண்டும் என்றால் அதில் முக்கிய பங்கு வகிப்பது முட்டையும் ஒன்று. காடை முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளையின் செயல்பாட்டை தூண்டி ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. மேலும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்து கொள்கிறது. கோழி முட்டைகளை நாம் அதிகமாக உண்டு வந்தாலும், அளவில் சிறியதாக காணப்படும் காடை முட்டையில் உள்ள சத்துக்கள் ஏராளம். சிலர் முட்டையை எப்படி செய்து கொடுத்தாலும் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் அவிச்ச காடை முட்டை என்றால் ஒதுக்கி வைத்து விடுவார்கள். எனவே அவிச்ச காடை முட்டை விரும்பி சாப்பிடணும்னா, இப்படி தொக்கு செய்து பாருங்கள். இந்த காடை முட்டை தொக்கை இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
இந்த காடை முட்டை தொக்கு செய்து சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். காடை முட்டையில் நல்ல கொலஸ்ட்ரால் நிறைவாக உள்ளது. அதோடு விட்டமின் பி1, விட்டமின் பி2 மற்றும் விட்டமின் ஏ உள்ளது. கோழி முட்டையைக் காட்டிலும் 4 மடங்கு காடை முட்டையில் விட்டமின் பி1 உள்ளது. அதேபோல் 15 மடங்கு விட்டமின் பி2 உள்ளது. காடை முட்டை தொக்கு அருமையான சுவையில் இப்படி ஒரு முறை செஞ்சு கொடுத்துப் பாருங்கள், எவ்வளவு சாப்பாடு இருந்தாலும் பத்தவே பத்தாது! அவ்வளவு சுவையாக இருக்கும். இது இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, சாதம், சிக்கன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, சீரக சாதம், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : காடை ரோஸ்ட் இப்படி ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்க. நீங்க செஞ்சு வச்ச உடனே காலி ஆயிடும்.