Home அசைவம் காரசாரமான ருசியில் சூப்பரான காடை முட்டை தொக்கு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

காரசாரமான ருசியில் சூப்பரான காடை முட்டை தொக்கு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

நாட்டு கோழி முட்டையை விட காடை முட்டையில் அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. மதிய வேளையில் சுலபமாகவும் சத்துக்கள் நிறைந்ததாகவும் சமைக்க வேண்டும் என்றால் அதில் முக்கிய பங்கு வகிப்பது முட்டையும் ஒன்று. காடை முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளையின் செயல்பாட்டை தூண்டி ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. மேலும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்து கொள்கிறது. கோழி முட்டைகளை நாம் அதிகமாக உண்டு வந்தாலும், அளவில் சிறியதாக காணப்படும் காடை முட்டையில் உள்ள சத்துக்கள் ஏராளம். சிலர் முட்டையை எப்படி செய்து கொடுத்தாலும் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் அவிச்ச காடை முட்டை என்றால் ஒதுக்கி வைத்து விடுவார்கள். எனவே அவிச்ச காடை முட்டை விரும்பி சாப்பிடணும்னா, இப்படி தொக்கு செய்து பாருங்கள். இந்த காடை முட்டை தொக்கை இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.

-விளம்பரம்-

இந்த காடை முட்டை தொக்கு செய்து சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். காடை முட்டையில் நல்ல கொலஸ்ட்ரால் நிறைவாக உள்ளது. அதோடு விட்டமின் பி1, விட்டமின் பி2 மற்றும் விட்டமின் ஏ உள்ளது. கோழி முட்டையைக் காட்டிலும் 4 மடங்கு காடை முட்டையில் விட்டமின் பி1 உள்ளது. அதேபோல் 15 மடங்கு விட்டமின் பி2 உள்ளது. காடை முட்டை தொக்கு அருமையான சுவையில் இப்படி ஒரு முறை செஞ்சு கொடுத்துப் பாருங்கள், எவ்வளவு சாப்பாடு இருந்தாலும் பத்தவே பத்தாது! அவ்வளவு சுவையாக இருக்கும். இது இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, சாதம், சிக்கன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, சீரக சாதம், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும்.

Print
3 from 1 vote

காடை முட்டை தொக்கு | Kadai Muttai Thokku Recipe In Tamil

நாட்டு கோழி முட்டையை விட காடை முட்டையில் அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. மதிய வேளையில் சுலபமாகவும் சத்துக்கள் நிறைந்ததாகவும் சமைக்க வேண்டும் என்றால் அதில் முக்கிய பங்கு வகிப்பது முட்டையும் ஒன்று. காடை முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளையின் செயல்பாட்டை தூண்டி ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. மேலும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்து கொள்கிறது. கோழி முட்டைகளை நாம் அதிகமாக உண்டு வந்தாலும், அளவில் சிறியதாக காணப்படும் காடை முட்டையில் உள்ள சத்துக்கள் ஏராளம். சிலர் முட்டையை எப்படி செய்து கொடுத்தாலும் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் அவிச்ச காடை முட்டை என்றால் ஒதுக்கி வைத்து விடுவார்கள். எனவே அவிச்ச காடை முட்டை விரும்பி சாப்பிடணும்னா, இப்படி தொக்கு செய்து பாருங்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Kadai Muttai Thokku
Yield: 4 People
Calories: 67kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 6 காடை முட்டை
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2 பட்டை, கிராம்பு
  • 2 அன்னாசி பூ
  • கறிவேப்பில்லை, கொத்தமல்லி சிறிதளவு
  • 1 டீஸ்பூன் நறுக்கிய பூண்டு
  • 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் தனியா தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் சோம்பு

செய்முறை

  • முதலில் காடை முட்டையை உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் மிளகு மற்றும் சோம்பு சேர்த்து வறுத்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் முட்டையை ஓட்டை நீக்கி சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்‌ அதே கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசி பூ சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து வதக்கவும்.
  • பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். பின் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதன்பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும். இது‌ கொதித்ததும் முட்டையை சேர்த்து கலந்து விடவும்.
  • பின் நாம் வறுத்து பொடி செய்துள்ள மிளகு சோம்பு தூளை சேர்த்து நன்கு தண்ணீர் சுண்டி தொக்கு பதம் வந்ததும் நறுக்கிய கொத்த மல்லி தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான காடை முட்டை தொக்கு தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 67kcal | Carbohydrates: 3.9g | Protein: 6.64g | Fat: 4.5g | Saturated Fat: 1.7g | Sodium: 130mg | Potassium: 125mg | Vitamin A: 200IU | Vitamin C: 50mg | Calcium: 24mg | Iron: 7.2mg

இதனையும் படியுங்கள் : காடை ரோஸ்ட் இப்படி ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்க. நீங்க செஞ்சு வச்ச உடனே காலி ஆயிடும்.