தித்திக்கும் சுவையில் கம்பு அல்வா ஒரு தடவை இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!
தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இருப்பினும் கொஞ்சம் சிரமப்பட்டு வாரத்தில் ஒரு முறையாவது சிறுதானிய வகைகளை உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். சிறு தானிய வகைகளில் முக்கியமானது கம்பு. பனிக்காலத்தில் நமது உடலை சூடாக வைத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகளில் கம்பும் ஒன்று
தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இருப்பினும் கொஞ்சம் சிரமப்பட்டு வாரத்தில் ஒரு முறையாவது சிறுதானிய வகைகளை உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். சிறு தானிய வகைகளில் முக்கியமானது கம்பு. பனிக்காலத்தில் நமது உடலை சூடாக வைத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகளில் கம்பும் ஒன்று. கம்பு வைத்து செய்யக்கூடிய அனைத்து உணவுகளும் நமக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் தான்.
சத்துக்கள் நிறைந்த பொருட்களில் ருசி கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ருசி நிறைந்த பொருட்களில், சத்துக்கள் மிக மிகக் குறைவு. ஆனால் இது நம்மில் பல பேருக்கு தெரியாது. நாவிற்கு ருசியை தரும் பொருட்களாக தேடித்தேடி சாப்பிடுவோம். இனி உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களில், ருசி கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. நம்முடைய உணவோடு சேர்த்துக் கொள்ளலாம். தானியங்களிலேயே அதிக அளவில் புரதம், கம்பில் தான் 11.8 சதவிகிதம் உள்ளது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ரிபோஃப்ளோவின், நாயசின், வைட்டமின்கள், தாதுப்புக்கள், மாவுச்சத்து, வைட்டமின் B12, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இரத்த சோகைப் பிரச்சனைக்குத் சிறந்த தீர்வை தருகிறது.
கம்பு வைத்து கஞ்சி, களி, புட்டு என்று பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம். வழக்கமாக நாம் காசி அல்வா, இருட்டு கடை அல்வா என்று செய்து சாப்பிட்டு இருப்போம். மேலும் ஏராளமான மருத்துவ பயன்களை கொண்டுள்ள கம்பில் இன்று நாம் பாரம்பரிய முறையில் கம்பு வைத்து அல்வாவை வீட்டில் சுவையாகவும் எளிமையாகவும் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பப்பாளி பழம் இருந்தால் போதும் தித்திக்கும் சுவையில் அல்வா இப்படி செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுங்கள்!