Home ஸ்வீட்ஸ் பப்பாளி பழம் இருந்தால் போதும் தித்திக்கும் சுவையில் அல்வா இப்படி செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுங்கள்!

பப்பாளி பழம் இருந்தால் போதும் தித்திக்கும் சுவையில் அல்வா இப்படி செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுங்கள்!

பப்பாளி பழத்தை வைத்து சுவையான அல்வா எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். பப்பாளி சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது . பப்பாளி ஆரோக்கியத்தை மேம்படுத்தி சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சத்தை குறைக்கும்.

-விளம்பரம்-

இனிப்பு என்றதும் நம் நினைவிற்கு வரும் பொருட்களில் ஒன்றுதான் அல்வா. அல்வா செய்வதில் பல வகைகள் இருக்கின்றன. அதிலும் பழங்களை வைத்து செய்யக்கூடிய அல்வாக்களின் சுவை மிகவும் அருமையாக இருக்கும். அந்த வகையில் இன்று மிகவும் எளிமையாக  சத்துக்கள் பல நிறைந்த பப்பாளி பழத்தை வைத்தும் அல்வா எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பகுதியில் பார்க்கப் போகிறோம்.

Print
5 from 1 vote

பப்பாளி அல்வா | Papaya Halwa Recipe In Tamil

இனிப்பு என்றதும் நம் நினைவிற்கு வரும் பொருட்களில்ஒன்றுதான் அல்வா. அல்வா செய்வதில் பல வகைகள் இருக்கின்றன. அதிலும் பழங்களை வைத்து செய்யக்கூடியஅல்வாக்களின் சுவை மிகவும் அருமையாக இருக்கும். பப்பாளி சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது . அந்த வகையில் இன்று மிகவும் எளிமையாக  சத்துக்கள் பல நிறைந்த பப்பாளி பழத்தை வைத்தும் அல்வா எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பகுதியில் பார்க்கப் போகிறோம்.
Prep Time2 minutes
Active Time14 minutes
Course: Dessert
Cuisine: tamil nadu
Keyword: Papaya halwa
Yield: 4
Calories: 580kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 கப் பப்பாளி பழ துண்டுகள்
  • 3/4 கப் சர்க்கரை
  • 4 தேக்கரண்டி நெய்
  • 1/2 கப் பால் காய்ச்சியது
  • ஏலக்காய் தூள் சிறிதளவு
  • 7 முந்திரி
  • 7 பாதாம் பருப்பு

செய்முறை

  • முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளுங்கள். அதிகம் பழத்த பழமாக இல்லாமல் சற்று காய் பதத்தில் எடுத்து கொள்ளவும். பாதாம், முந்திரி பருப்புகளை மெலிதாக நறுக்கி கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கி போட்டு வதக்குங்கள்.
  • பச்சை வாடை போனதும் காய்ச்சிய பாலை ஊற்றி நன்கு வேக விடவும். பப்பாளி நன்கு குழைந்து வரும் அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும். அல்வா சுண்டி வரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவிடவும்.
  • பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்பொழுது முந்திரி, பாதாம், ஏலக்காய் தூள் தூவி கிளறி இறக்கவும். சுவையான பப்பாளி அல்வா தயார்

Nutrition

Serving: 300g | Calories: 580kcal | Carbohydrates: 7.9g | Protein: 32.8g | Cholesterol: 180mg | Sodium: 108mg | Potassium: 398mg