Home ஆன்மிகம் கனவில் வரும் நிகழ்வுகளால் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளும் அதற்கான எச்சரிக்கைகளும்!

கனவில் வரும் நிகழ்வுகளால் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளும் அதற்கான எச்சரிக்கைகளும்!

பொதுவாக நாம் ஒரு நாளில் பார்க்கின்ற நிகழ்வுகளோ அல்லது நம் ஆழ்மனதில் நினைக்கும் சில விஷயங்களோ இரவில் நாம் தூங்கும் போது நமக்கு கனவாக வரும். கனவுகள் நமக்கு மகிழ்ச்சி தருவதாகவும் வரும் அதே சமயத்தில் பயம் தருவதாகவும் வரும். ஒரு சில கனவுகள் வரும்பொழுது அது நம் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். கனவு சாஸ்திரத்தின் படி நமக்கு வருகின்ற ஒவ்வொரு கனவுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஒரு சில கனவுகள் நமக்கு வரும்போது நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒரு சில கனவுகள் நமக்கு எதிர்காலத்தை கூறுவதற்காகவும் வரும். அந்த வகையில் ஒவ்வொரு கனவிற்கும் நம் கனவில் வரும் ஒரு சில பொருளுக்கும் என்னென்ன அர்த்தங்கள் என்பதை பற்றி இந்த பதிவில்

-விளம்பரம்-

பார்க்கலாம்.

உடைந்த கண்ணாடி

உடைந்த கண்ணாடி ஒரு நபருடைய குணத்தை பிரதிபலிப்பதற்கும். எனவே உடைந்த கண்ணாடி நம் கனவில் வந்தால் அது துர்திஷ்டத்தை குறிக்கும். அது நம் ஆன்மாவின் உருவத்தை பிரதிபலிக்கும். எனவே உடைந்த கண்ணாடி நம் கனவில் வருவது நல்ல விஷயம் நல்ல கனவு கிடையாது. உடைந்த கண்ணாடியை நம் கனவில் கண்டால் அது தொழில் உறவுகள் நட்புகள் போன்றவற்றில் விரிசல் எடுப்பதையும் சில சில பிரச்சனைகள் வரப்போவதையும் குறிக்கும். உடைந்த கண்ணாடி எதிர்காலத்தில் நமக்கு பிடித்தமானவர்களுடன் இருக்கும் உறவில் விரிசல் ஏற்பட போவதை நமக்கு குறிக்கும்.

கிழிந்த ஆடைகள்

கிழிந்த ஆடைகளை கனவில் கண்டால் அது துரதிஷ்டத்தின் அம்சமாக விளங்கும். வாழ்க்கையில் பிரச்சனைகள் தொழிலில் வீழ்ச்சி போன்றவைகளை இந்த கிழிந்த ஆடைகள் கனவு குறிக்கும். கிழிந்த ஆடைகளை கனவில் பார்ப்பவர்கள் பலவீனம் அற்றவர்கள் ஆகவும், பாதுகாப்பு அற்றவர்களாகவும் கருதப்படுவார்கள்.

உடைந்த பற்கள்

பற்கள் வலிமையின் சின்னமாக இருப்பதால் பற்கள் இழப்பு போன்ற கனவுகள் கண்டால் அது நமக்கு பயம் பதற்றம் போன்றவற்றை கொடுக்கும். மேலும் பற்கள் இழப்பு போன்ற கனவுகள் நாம் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை இழக்கப்போவதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம் அதனால் சற்று கவனம் அதிகமாக தேவை.

-விளம்பரம்-

தவறான வழியில் செல்வது போல் வரும் கனவு

நம்முடைய கனவில் ஏதாவது ஒரு தப்பிக்க முடியாத இடத்தில் மாட்டிக் கொள்வது போல் அல்லது தவறான வழியில் செல்வது போல் கனவுகள் வந்தால் அது நாம் எடுத்து இருக்கும் சில முடிவுகளில் மாற்றம் தேவை என்பதை குறிக்கும். எனவே நாம் இந்த காலத்தில் எடுத்திருக்கின்ற முடிவுகளை கொஞ்சம் யோசித்து பிறகு அந்த முடிவுகளை உறுதிப்படுத்த வேண்டும். இது நம் அன்றாட வாழ்க்கையிலும் நமக்கு மிகப்பெரிய உதவியாக அமையும். எதிர்கால சிக்கல்களை குறைப்பதற்கும் தவறான முடிவுகளை எடுக்காமல் இருக்கவும் இந்த கனவை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மாதிரியான கனவுகள் வந்தால் நாம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இருண்ட பயங்கரமான கடல்

நம்முடைய கனவில் இருண்ட கடல் போன்ற நிகழ்வுகள் வந்தால் அது எதிர்காலத்தில் வரப்போகும் பிரச்சினையை குறிக்கும். இந்த கடலில் வரும் அலைகளும் புயல்களும் நம் வாழ்க்கையில் உள்ள சில சவால்களையும் மோதல்களையும் குறிக்கும். எனவே இந்த கனவுகள் உங்களுக்கு வந்தால் நிஜ வாழ்க்கையில் உங்களுக்கு இருக்கும் மோதல்களையும் பிரச்சனைகளையும் சரியாக எதிர்கொள்ள வேண்டும்.

இதனையும் படியுங்கள் : கனவில் சிவபெருமான் வந்தால் அதற்கான காரணம் தெரியுமா ? அதனால் நமக்கு கிடைக்கப் போகும் பலன்கள் என்னென்ன?

-விளம்பரம்-