Home சைவம் காஞ்சிபுரம் சிறுதானிய இட்லி இப்படி செய்து பாருங்க! 2 இட்லி அதிகமாகவே சாப்பிடுவாங்க!

காஞ்சிபுரம் சிறுதானிய இட்லி இப்படி செய்து பாருங்க! 2 இட்லி அதிகமாகவே சாப்பிடுவாங்க!

தமிழர்களின் தினசரி காலை உணவில் இட்லிக்கு மிக முக்கியமான இடம் உண்டு. சாப்பிட்டவுடன் எளிதில் ஜீரணமாகி, உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவு இது என்றாலும் தினமும் இட்லி என்றால் சாப்பிடுபவர்களுக்கு அது ஒருவித அலுப்பைத் தந்துவிடும். அந்தப் பிரச்னை இனி உங்களுக்கு வராது. இதோ பனீர் இட்லி, ராமசேரி இட்லி, கடலைப்பருப்பு இட்லி, கர்நாடகா இட்லி என்று விதவிதமான இட்லி ரெசிப்பிகள் உள்ளன.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : ருசியான வெஜிடபிள் பாசிப்பயிறு இட்லி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

நம் பாரம்பரிய உணவே ஆரோக்கியமான உணவு என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்த ஒரு மிகப்பெரிய உண்மையாகும். சிறுதானியத்தில் ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உள்ளதால் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களை உடலில் தடைசெய்கிறது. வரகரிசி மிகவும் ஆரோக்கியம் மிகுந்த சிறுதானிய வகை. சிறு தானியங்களைக் கொண்டு ஏராளமான உணவு வகைகள் செய்யலாம்.

Print
5 from 2 votes

காஞ்சிபுரம் சிறுதானிய இட்லி| Kanchipuram Millet Idly

தமிழர்களின் தினசரி காலை உணவில் இட்லிக்கு மிக முக்கியமான இடம் உண்டு. சாப்பிட்டவுடன் எளிதில் ஜீரணமாகி, உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவு இது என்றாலும் தினமும் இட்லி என்றால் சாப்பிடுபவர்களுக்கு அது ஒருவித அலுப்பைத் தந்துவிடும். அந்தப் பிரச்னை இனி உங்களுக்கு வராது. இதோ… பனீர் இட்லி, ராமசேரி இட்லி, கடலைப்பருப்பு இட்லி, கர்நாடகா இட்லி என்று விதவிதமான இட்லி ரெசிப்பிகள் உள்ளன. பிறகென்ன தினம் ஒருவகை இட்லியைச் செய்து கொடுத்து குடும்பத்தை அசத்தலாம்தானே! வரகரிசி மிகவும் ஆரோக்கியம் மிகுந்த சிறுதானிய வகை. சிறு தானியங்களைக் கொண்டு ஏராளமான உணவு வகைகள் செய்யலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, tamilnadu
Keyword: idly
Yield: 5 People
Calories: 378kcal

Equipment

  • 1 கரண்டி
  • 1 பவுள்
  • 1 இட்லி பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 50 கிராம் சோளம்
  • 50 கிராம் தினை
  • 50 கிராம் கேழ்வரகு
  • 50 கிராம் கம்பு
  • 50 கிராம் வரகு
  • 50 கிராம் சாமை
  • 50 கிராம் குதிரை வாலி
  • 150 கிராம் உளுந்து
  • உப்பு தேவையானஅளவு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் உளுந்தை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • மற்றொரு பாத்திரத்தில் சிறுதானியங்களை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • உளுந்தை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும் சிறுதானியங்களை தனியாக எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • இரண்டையும் உப்பு சேர்த்து பிசைந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  • இப்பொழுது இட்லி பாத்திரத்தில் ஊற்றி எடுத்தால் சுவையான சத்தான காஞ்சிபுரம் இட்லி ரெடி.

Nutrition

Serving: 500g | Calories: 378kcal | Carbohydrates: 72.9g | Protein: 11g | Fat: 4.2g | Saturated Fat: 0.7g | Potassium: 195mg | Fiber: 8.5g | Iron: 15mg