Advertisement
சைவம்

கப்பக்கிழங்கு முருங்கைக்கீரை அடை இப்படி செய்து பாருங்க!

Advertisement

கிழங்கு வகைகளில் அதிக மாவுச் சத்து உள்ள கிழங்குதான் கப்பக்கிழங்கு- கோதுமை மாவை விட அதிகமான மாவுச் சத்து கப்பக்கிழங்கில்தான் உள்ளது. ஆனால் மற்ற சத்துக்கள் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் கப்பக்கிழங்கு குழந்தைகளுக்கு சிறந்தது. கப்பையை

சாப்பிட்டுவிட்டு வேலைகள் ஏதும் செய்யாமல் இருந்தால் உடல் எடை அதிகரித்து விடும். இந்த கப்பக்கிழங்கோடு முருங்கைக் கீரை சேர்த்து செய்வதால் நார்ச்சத்து கிடைப்பதோடு ஜீரணத்துக்கும் உதவுகிறது. செய்து சாப்பிட்டுப் பாருங்கள் சுறுசுறுப்புடன் தென்படுவீர்கள்.

Advertisement

கப்பங்கிழங்கு முருங்கைக்கீரை அடை | Kappakilangu Murungai Keerai Adai

Print Recipe
கிழங்கு வகைகளில் அதிக மாவுச் சத்து உள்ள கிழங்குதான் கப்பக்கிழங்கு- கோதுமை மாவை விட அதிகமான மாவுச் சத்து கப்பக்கிழங்கில் தான் உள்ளது. ஆனால் மற்ற சத்துக்கள் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் கப்பக்கிழங்கு குழந்தைகளுக்கு சிறந்தது. கப்பையை சாப்பிட்டுவிட்டு வேலைகள் ஏதும் செய்யாமல் இருந்தால் உடல் எடை அதிகரித்து விடும். இந்த கப்பக்கிழங்கோடு முருங்கைக் கீரை சேர்த்து செய்வதால் நார்ச்சத்து கிடைப்பதோடு ஜீரணத்துக்கும் உதவுகிறது. செய்து சாப்பிட்டுப் பாருங்கள் சுறுசுறுப்புடன் தென்படுவீர்கள்.
Course Breakfast
Cuisine Indian, TAMIL
Keyword Adai, அடை
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Servings 4 People
Calories 123

Equipment

  • 1 மிக்ஸி (அ) கிரைண்டர்
  • 1 தோசைக்கல்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 கப்பக்கிழங்கு
  • 2 கப் பச்சரிசி
  • 1/2 கப் துவரம் பருப்பு
  • 1/2 கப் உளுந்த பருப்பு
  • 1/2 கப் கடலை பருப்பு
  • 1/2 கப் பாசி பருப்பு
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பச்சை மிளகாய்
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1 கப் முருங்கைக்கீரை
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • கப்பக்கிழங்கை தோலுரித்து சுத்தம் செய்து.
    Advertisement
    நன்றாகத் துருவி வைத்துக் கொள்ளவும். அரிசி, பருப்பு, வகைகளை மூன்று மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
  • ஊறியபின் சுத்தம் செய்து கொண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு, துருவிய கப்பக்கிழங்கு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும் மாவு தயார்.
  • பின் வழக்கம் போல் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நாம் அரைத்த மாவை அடையாக ஊற்றி முருங்கைக் கீரையைத் தூவி, வெந்தவுடன் திருப்பிப்போட்டு எடுக்கவும்.
  • தொட்டுக் கொள்ள நாட்டுச்சர்க்கரை, அல்லது வெங்காயச் சட்னி வெகு பொருத்தம். அவ்வளவு தான் சரிவிகித சத்தான உணவு இந்த கப்பக்கிழங்கு முருங்கைக்கீரை அடை தயார்.

Nutrition

Serving: 400G | Calories: 123kcal | Carbohydrates: 67g | Protein: 13g | Fat: 1g | Saturated Fat: 0.5g | Potassium: 221mg | Fiber: 20g | Sugar: 0.5g | Iron: 2mg

இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் புளி அடை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…

9 நிமிடங்கள் ago

தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பிரதமன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…

1 மணி நேரம் ago

இட்லி ,தோசை சாதம்,சப்பாத்திக்கு அருமையான பாலக் கீரை தால் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்…

2 மணி நேரங்கள் ago

வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்று பார்க்கலாம்

கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக…

6 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் சூப்பரான மலபார் முட்டை பிரியாணி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக முட்டை பிரியாணி என்றால் சொல்லவா…

7 மணி நேரங்கள் ago

கமகம வாசத்துடன் ருசியான நாஞ்சில் மீன் குழம்பு இப்படி செஞ்சி பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!

மீன் குழம்பு ருசிப்பவர்கள் நிச்சயம் அதிகம் இருப்பார்கள். இந்த நாஞ்சில் மீன் குழம்பு சாப்பிடுவதற்கு மசாலா கலந்து மிகவும் ருசியாக…

7 மணி நேரங்கள் ago