- Advertisement -
கிழங்கு வகைகளில் அதிக மாவுச் சத்து உள்ள கிழங்குதான் கப்பக்கிழங்கு- கோதுமை மாவை விட அதிகமான மாவுச் சத்து கப்பக்கிழங்கில்தான் உள்ளது. ஆனால் மற்ற சத்துக்கள் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் கப்பக்கிழங்கு குழந்தைகளுக்கு சிறந்தது. கப்பையை
-விளம்பரம்-
சாப்பிட்டுவிட்டு வேலைகள் ஏதும் செய்யாமல் இருந்தால் உடல் எடை அதிகரித்து விடும். இந்த கப்பக்கிழங்கோடு முருங்கைக் கீரை சேர்த்து செய்வதால் நார்ச்சத்து கிடைப்பதோடு ஜீரணத்துக்கும் உதவுகிறது. செய்து சாப்பிட்டுப் பாருங்கள் சுறுசுறுப்புடன் தென்படுவீர்கள்.
- Advertisement -
கப்பங்கிழங்கு முருங்கைக்கீரை அடை | Kappakilangu Murungai Keerai Adai
கிழங்கு வகைகளில் அதிக மாவுச் சத்து உள்ள கிழங்குதான் கப்பக்கிழங்கு- கோதுமை மாவை விட அதிகமான மாவுச் சத்து கப்பக்கிழங்கில் தான் உள்ளது. ஆனால் மற்ற சத்துக்கள் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் கப்பக்கிழங்கு குழந்தைகளுக்கு சிறந்தது. கப்பையை சாப்பிட்டுவிட்டு வேலைகள் ஏதும் செய்யாமல் இருந்தால் உடல் எடை அதிகரித்து விடும். இந்த கப்பக்கிழங்கோடு முருங்கைக் கீரை சேர்த்து செய்வதால் நார்ச்சத்து கிடைப்பதோடு ஜீரணத்துக்கும் உதவுகிறது. செய்து சாப்பிட்டுப் பாருங்கள் சுறுசுறுப்புடன் தென்படுவீர்கள்.
Yield: 4 People
Calories: 123kcal
Equipment
- 1 மிக்ஸி (அ) கிரைண்டர்
- 1 தோசைக்கல்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப்பக்கிழங்கு
- 2 கப் பச்சரிசி
- 1/2 கப் துவரம் பருப்பு
- 1/2 கப் உளுந்த பருப்பு
- 1/2 கப் கடலை பருப்பு
- 1/2 கப் பாசி பருப்பு
- 1 துண்டு இஞ்சி
- 4 பச்சை மிளகாய்
- 4 காய்ந்த மிளகாய்
- 1 கப் முருங்கைக்கீரை
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- கப்பக்கிழங்கை தோலுரித்து சுத்தம் செய்து. நன்றாகத் துருவி வைத்துக் கொள்ளவும். அரிசி, பருப்பு, வகைகளை மூன்று மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
- ஊறியபின் சுத்தம் செய்து கொண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு, துருவிய கப்பக்கிழங்கு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும் மாவு தயார்.
- பின் வழக்கம் போல் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நாம் அரைத்த மாவை அடையாக ஊற்றி முருங்கைக் கீரையைத் தூவி, வெந்தவுடன் திருப்பிப்போட்டு எடுக்கவும்.
- தொட்டுக் கொள்ள நாட்டுச்சர்க்கரை, அல்லது வெங்காயச் சட்னி வெகு பொருத்தம். அவ்வளவு தான் சரிவிகித சத்தான உணவு இந்த கப்பக்கிழங்கு முருங்கைக்கீரை அடை தயார்.
Nutrition
Serving: 400G | Calories: 123kcal | Carbohydrates: 67g | Protein: 13g | Fat: 1g | Saturated Fat: 0.5g | Potassium: 221mg | Fiber: 20g | Sugar: 0.5g | Iron: 2mg
இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் புளி அடை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!