- Prep
- 20 min
- Cook
- 15 min
- Total
- 35 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner, LUNCH
அனைத்து வேலைகளிலும் சுவையாக உண்ணக்கூடிய ஒரு உணவு புளி அடை இதனை பழனியில் மிக பிரபலமாக இருக்கும் நாம் சாப்பிடும் உணவுகளில் மிக சுவையான ஒரு உணவாக இதற்கும் இதனை அனைத்து விதமான பொருட்களுடன் வைத்து சாப்பிடலாம் டீ காபி இதனை இணைத்து சாப்பிடலாம் மிகவும் அருமையாக இருக்கும்ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள்
இதையும் படியுங்கள் : ருசியான நாவில் எச்சி ஊற வைக்கும் புளி வடை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான புளி அடை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த புளி அடை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
புளி அடை செய்ய முதலில் இட்லி அரிசி, துவரம் பருப்பு, மிளகாய் வற்றல் நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்தவற்றை போட்டு அதில் ஊற வைத்த கடலைப்பருப்பு, சிறிதாக நறுக்கிய கருவேப்பிலை, உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அதில் சீரகம், புளி சேர்த்து தண்ணீர் ஊற்றி ஏழு மணி நேரம் ஊற விட வேண்டும். கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் தனியாக தண்ணீர் ஊற்றி ஊற விட வேண்டும்.
பின்னர் கலவை ஊறிய உடன் கிரைண்டரில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
கலவையை சிறிது நேரம் ஒரு காட்டன் துணியை வைத்து கலவையில் படும்படி முடி வைத்துக் கொள்ள வேண்டும்.
காட்டன் துணி தண்ணீர் உறிஞ்சிய உடன் கலவையை சப்பாத்தி மாவு பதம் வந்ததும் சிறு உருண்டைகளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சிறு உருண்டைகளை வட்ட வடிவில் தட்டி எண்ணெயில் போட்டு சிறிது நேரம் பொறுத்தெடுக்க வேண்டும். அதிக நேரம் பொறுத் தெடுக்கக்கூடாது.இப்பொழுது சுவையான புளி அடை தயார்.






