சுட சுட சோறுடன் சேர்த்து சாப்பிட ருசியான கொங்கு நாட்டு காரமணி கடையில் இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

தானிய வகைகள் என்றாலே அதில் பல சத்துக்கள் அடங்கியிருக்கும். அதிலும் பயிறு வகைகளில் கிடைக்க கூடிய அதிகப்படியான சத்துக்கள் ஆன கால்சியம் மெக்னீசியம் விட்டமின்கள் மினரல்கள் போன்றவை உடலுக்கு அதிக வலிமையை கொடுக்கக்கூடியது. இப்படிப்பட்ட பயறு வகைகளில் ஒன்று தான் காராமணி பெயர் அதாவது தட்டை பயறு.

-விளம்பரம்-

90’s கிட்ஸ்  பள்ளிக்கூட வாசலில் விற்கும் காராமணி பயிர் சுண்டல் ஒரு சுருள் ஒரு ரூபாய் தனி தான். அப்படிப்பட்ட 90’s கிட்ஸின் காராமணி பயிரில் கொங்கு நாட்டு ஸ்டைலில் கச்சிதமான கடையல் ஒன்று செய்யப் போகிறோம். இந்த காராமணி பயிறு தட்டைப்பயறு என்றும் அழைக்கப்படுகிறது. காராமணியில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இளமையை தக்க வைக்குமாம் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து இளமையான தோற்றத்தை கொடுக்குமாம். இதில் இருக்கும் இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகையை குறைக்க வழி போகிறது. மெக்னீசியம் , விட்டமின் சி  , புரதம் போன்றவை சருமத்திற்கு நன்மை தரக்கூடியவை.

- Advertisement -

காராமணி பயிறில்  உள்ள மெக்னீசியம் இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. ஆகையால் இது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது.  மேலும் உடலில் ஏற்படும் சோர்வை நீக்குகிறது. நல்ல தூக்கத்தை கொடுக்கிறது. காராமணியில் சுண்டல் மட்டும் சாப்பிட்ட நமக்கு இப்பொழுது காராமணியில் கடையல் சாப்பிட்டு நாவிற்கும் , வயிறுக்கும் மனதிற்கும் திருப்தியை கொடுப்போம். காராமணியில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு என்பதால் இது எடையை குறைக்க பயன்படுகிறது. இப்படிப்பட்ட காராமணி பயிறில் கடையல் கொங்கு நாட்டு ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

காராமணி கடையல் | Karamani Kadaiyal Recipe In Tamil

காராமணி பயிறு தட்டைப்பயறு என்றும் அழைக்கப்படுகிறது. காராமணியில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இளமையை தக்க வைக்குமாம் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து இளமையான தோற்றத்தை கொடுக்குமாம். இதில் இருக்கும் இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகையை குறைக்க வழி போகிறது. மெக்னீசியம் , விட்டமின் சி  , புரதம் போன்றவை சருமத்திற்கு நன்மை தரக்கூடியவை. காராமணியில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு என்பதால் இது எடையை குறைக்க பயன்படுகிறது. இப்படிப்பட்ட காராமணி பயிறில் கடையல் கொங்கு நாட்டு ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Karamani Kadaiyal
Yield: 4
Calories: 112.5kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் காராமணி பயறு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 7 பல் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 பல் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க

  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் உளுந்து
  • 3 பல் பூண்டு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி தேவையான அளவு

செய்முறை

  • கடாயில் காராமணி பயிரை இட்டு நல்ல மனம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த காராமணி பயிரை நன்றாக நீரில் கழுவி விட வேண்டும்.
  •  
    குக்கரில் கழுவிய காராமணி பயிறு 7 பல் பூண்டு , மஞ்சள் தூள் சேர்த்து 1 கப் காராமணி பயிருக்கு 3 கப் தண்ணீர் விட்டு 5 விசில் வரும் வரை குக்கரை மூடி வைக்க வேண்டும்.
  •  
    பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு , உளுந்து , சீரகம் கருவேப்பில்லை சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • பின் நறுக்கிய பூண்டு , நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி இவைகளை கலந்து நன்றாக குழைந்து வரும் வரை வதக்கி அதில் கொத்தமல்லியை தூவ வேண்டும்.
     

Nutrition

Serving: 700g | Calories: 112.5kcal | Carbohydrates: 20g | Protein: 7.5g | Fat: 6.4g | Vitamin C: 1.2mg | Calcium: 35mg | Iron: 2.2mg