ருசியான கர்நாடகா கத்தரிக்காய் சாதம் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க! அருமையான டிபன் பாக்ஸ் ரெசிபி கூட!

கத்திரிக்காயை வைத்தது ஒரு வெரைட்டி ரைஸ் ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கர்நாடகாவில் இதை வாங்கி பாத் என்று சொல்லுவார்கள். எத்தனை நாளைக்குத்தான் குழம்பு ரசம் என்று செய்வது. இது போல ஒரே மாதிரியாக செய்து கொடுத்தால் செய்கிறவர்களுக்கு சரி. சாப்பிடுபவர்களுக்கும் ச

By Prem Kumar · 18/2/2024

கத்திரிக்காயை வைத்தது ஒரு வெரைட்டி ரைஸ் ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கர்நாடகாவில் இதை வாங்கி பாத் என்று சொல்லுவார்கள். எத்தனை நாளைக்குத்தான் குழம்பு ரசம் என்று செய்வது. இது போல ஒரே மாதிரியாக செய்து கொடுத்தால் செய்கிறவர்களுக்கு சரி. சாப்பிடுபவர்களுக்கும் சரி போர் அடித்து விடும். ஒருநாள் வித்தியாசமாக கத்தரிக்காயை வைத்து இந்த வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிட்டு தான் பார்ப்போமே. கத்திரிக்காய் சாதம் கர்நாடகத்தின் பாரம்பரிய உணவாகும். கர்நாடகா மட்டுமின்றி மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் தமிழ்நாட்டிலும் இது விரும்பி உண்ணப்படுகிறது. வாங்கிபாத் கத்தரிக்காய் பிரியர்களுக்கான மிகச்சிறந்த உணவு வகையாகும். கத்தரிக்காய் சாதம், மசாலாவுடன் ஊற வைத்த அரிசி மற்றும் கத்தரிக்காய் சேர்த்து பிரஷர் குக்கரில் தயாரிக்கலாம். இதன் சுவையும், மணமும் ஒருமுறை சாப்பிட்டால் உங்கள் நாவைவிட்டு நீங்காது.

இது லஞ்ச் பாக்ஸ்க்கு சிறந்தது. தக்காளி சாதம், பிரிஞ்சி சாதம், தேங்காய் சாதம், பிரியாணி போன்ற உணவு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும். இவற்றை அடிக்கடி நமது வீடுகளில் செய்திருப்போம். ஆனால் முதல்முறையாக கத்தரிக்காயை பயன்படுத்தி செய்யக்கூடிய இந்த கத்தரிக்காய் சாதம் இவ்வாறு செய்து பாருங்கள். இதன் சுவை சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். கத்தரியில் காணப்படும் போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கொழுப்பைக் கரைக்கவும் உதவுகின்றன. இப்படி நிறை ஆரோக்கிய பயன்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ள கத்திரியில் எப்படி சாதம் தயார் செய்யலாம் என இங்கு பார்க்கலாம். கத்தரிக்காய் சாதம் விரைவில் செய்யக்கூடிய ஒரு சுவையான சாதம் இதனை தயிர் பச்சடி அல்லது உருளைக்கிழங்கு பொடிமாஸ் உடன் பரிமாறலாம்.

இதனையும் படியுங்கள் : கத்தரிக்காய் புளி கூட்டு ஒருமுறை இவ்வாறு செய்து பாருங்கள், மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்!

Recipes AMP · Quick view
View full