- Advertisement -
குழந்தைகள், மற்றும் பெரியவர்களுக்கு என்ன லன்ச் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது, கறிவேப்பிலை சாதம் சட்டுனு இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க அப்றம் மீண்டும் மீண்டும் எப்போ செய்விக்கனு கேப்பாங்க. அதுமட்டும் அல்லாமல் கறிவேப்பிலையில் உடலுக்கு மிகவும் நல்லது பொதுவாக குழந்தைகள்
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : சுட சுட சுவையான வெண்டைக்காய் வறுவல் சாதம் இப்படி செய்து பாருங்க!
- Advertisement -
சாதத்தில் கறிவேப்பிலை பார்த்தால் தனியாக ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால் இனி உங்களுக்கு கவலை வேண்டாம் இந்த முறையில் கறிவேப்பிலை சாதம் செஞ்சி கொடுங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
கருவேப்பிலை சாதம் | Karuvepilai Sadam Recipe In Tamil
குழந்தைகள், மற்றும் பெரியவர்களுக்கு என்ன லன்ச் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது, கறிவேப்பிலை சாதம் சட்டுனு இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க அப்றம் மீண்டும் மீண்டும் எப்போ செய்விக்கனு கேப்பாங்க. அதுமட்டும் அல்லாமல் கறிவேப்பிலையில் உடலுக்கு மிகவும் நல்லது பொதுவாக குழந்தைகள் சாதத்தில் கறிவேப்பிலை பார்த்தால் தனியாக ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால் இனி உங்களுக்கு கவலை வேண்டாம் இந்த முறையில் கறிவேப்பிலை சாதம் செஞ்சி கொடுங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.
Yield: 4 people
Calories: 110kcal
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- 2 டீஸ்பூன் எண்ணெய்
- 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் மல்லி
- 2 வர மிளகாய்
- 1 கப் கருவேப்பிலை
தைப்பதற்கு:
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் கடுகு
- 10 பல் பூண்டு தட்டியது
- 1 ஸ்பூன் வேர்க்கடலை
- 2 வர மிளகாய்
- கருவேப்பிலை கொஞ்சம்
- 1 டீஸ்பூன் பெருங்காய பொடி
செய்முறை
- முதலில் ஒரு வாணலில் எண்ணெய்ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு , சீரகம், மல்லி, வர மிளகாய், 1 கப் கருவேப்பிலை சேர்த்து வதக்கி மிக்சியில் சேர்த்து நன்கு கோர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
- பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பூண்டு வேர்க்கடலை, வர மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயப்பொடி, மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தாளித்து வடித்து வைத்துள்ள சாதத்தை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
Nutrition
Serving: 600G | Calories: 110kcal | Carbohydrates: 67g | Protein: 9g | Fat: 0.1g | Saturated Fat: 0.5g | Vitamin A: 4IU | Iron: 31mg