இன்று நாம் குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுத்து விடும் வகையில் ஒரு அசத்தலான சாதம் ரெசிபி பற்றி தான் பார்க்கப் போகிறோம். ஆம், இன்று வெணடைக்காய் வறுவல் சாதம் செய்வது பற்றி தான் பார்க்கப் போகிறோம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இது போன்று இந்த வெண்டைக்காய் வறுவல் சாதத்தை செய்து கொடுத்தால் நீங்கள் கொடுத்துவிட்ட டிபன் பாக்ஸ் காலியாக தான் வரும். அது மட்டும் இல்லாமல் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்
இதையும் படியுங்கள் : மணமணக்கும் ருசியான தேங்காய் சாதம் செய்வது எப்படி ?
ஏன் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடும் அளவிற்கு இந்த வெண்டைக்காய் வறுவல் சாதம் அட்டகாசமான சுவையில் இருக்கும். அடுத்த முறையும் உங்களையும் இது போல் செய்து தரச் சொல்லி உங்களிடம் கேட்பார்கள். அதனால் இன்று இந்த சுவையான வெண்டைக்காய் வறுவல் சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
வெண்டைக்காய் வறுவல் சாதம் | Vendaikkai Fry Sadam Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 ½ மேசை கரண்டி எண்ணெய்
- ½ tbsp கடுகு
- ½ tbsp ஊளுந்த பருப்பு
- ½ tbsp கடலை பருப்பு
- 2 வர மிளகாய்
- 1 கொத்து கருவேப்பிலை
- 1 tbsp வேர்க்கடலை
- 6 முந்திரி பருப்பு
- 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
- ¼ tbsp மஞ்சள் தூள்
- 1 tbsp சாம்பார் பொடி
- 1 tbsp புளி பேஸ்ட்
- உப்பு தேவையான அளவு
- சாதம் தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய்களை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
- பின் வெண்டைக்காயின் பிசுபிசுப்பு தன்மை போகி நன்கு ரோஸ்ட் ஆகி வரும் வரை வதக்கி பின் தனியாக ஒரு பிளேட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றவும்.
- பின் எண்ணெய் காய்ந்ததும் இதனுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து கிளறி விடவும். பின் கடுகு பொரிந்து வந்தவுடன் இதனுடன் வர மிளகாய், கருவேப்பிலை, வேர்க்கடலை மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள்.
- பின் முந்திரி பருப்புகள் பொன்னிறமாக வரும் வரை வறுத்து, பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திருக்கும் வரும் வரை வதக்கி கொள்ளுங்கள்.
- பின்பு இதனுடன் மஞ்சள் தூள், சாம்பார் பொடி, புளி பேஸ்ட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின் மசாலா பொருட்கள் வேகும் வரை வதக்கி விட்டு பின் இதனுடன் நாம் வடித்து வைத்திருக்கும் சாதத்தை தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்.
- பின் நம் வதக்கிய வெண்டைக்காயையும் இதனோடு சேர்த்து நன்கு கலந்து ஒரு நிமிடம் நன்கு கிளறி விட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுட சுட சுவையான வெண்டைக்காய் வறுவல் சாதம் இனிதே தயாராகி விட்டது.