காரசாரமான ருசியில் காஷ்மீர் ராஜ்மா சப்ஜி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
சோயா பீன்ஸ் அல்லது சிவப்பு பீன்ஸ் அல்லது ராஜ்மா என அழைக்கப்படும் இந்த அற்புத உணவுப்பொருட்கள் ஏராளமான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. இந்த சோயா பீன்ஸை வட இந்திய மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இப்போது தென்னிந்திய மாநிலத்திலும் அதிகளவு சமையலில் உபயோகிக்கின்ற
சோயா பீன்ஸ் அல்லது சிவப்பு பீன்ஸ் அல்லது ராஜ்மா என அழைக்கப்படும் இந்த அற்புத உணவுப்பொருட்கள் ஏராளமான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. இந்த சோயா பீன்ஸை வட இந்திய மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இப்போது தென்னிந்திய மாநிலத்திலும் அதிகளவு சமையலில் உபயோகிக்கின்றனர். இந்த பீன்ஸிற்கு சிவப்பு காராமணி என்று மற்றொரு பெயரும் உள்ளது. சோயா பீன்ஸை உணவில் அதிகமாக சேர்த்துக்கொண்டால் உடலானது எப்போதும் ஆரோக்கியத்துடன் காணப்படும். இவற்றில் கால்சியம், இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளதால் இவை வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. மேலும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இவற்றை தாராளமாக தங்களது உணவுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த சோயாவை வைத்து சுண்டல், கிரேவி, சப்ஜி என்று பல விதங்களில் சமைக்கலாம். அந்த வகையில் இன்று நாம் சோயா வைத்து ஸ்பைசியான சப்ஜியை காண உள்ளோம். இதனை பூரி, சப்பாத்தி, புல்கா, சாதம் போன்றவற்றிற்கு வைத்து சாப்பிட அருமையாக இருக்கும். இது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதோடு, நாவிற்கு சுவையையும் தரக்கூடிய ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப சுலபமா வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சட்டுனு இந்த ரெசிபியை செய்திடலாம். இதனை பெரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.
இதனையும் படியுங்கள் : ருசியான ராஜ்மா உருண்டை குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! சுடு சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்!