சோயா பீன்ஸ் அல்லது சிவப்பு பீன்ஸ் அல்லது ராஜ்மா என அழைக்கப்படும் இந்த அற்புத உணவுப்பொருட்கள் ஏராளமான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. இந்த சோயா பீன்ஸை வட இந்திய மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இப்போது தென்னிந்திய மாநிலத்திலும் அதிகளவு சமையலில் உபயோகிக்கின்றனர். இந்த பீன்ஸிற்கு சிவப்பு காராமணி என்று மற்றொரு பெயரும் உள்ளது. சோயா பீன்ஸை உணவில் அதிகமாக சேர்த்துக்கொண்டால் உடலானது எப்போதும் ஆரோக்கியத்துடன் காணப்படும். இவற்றில் கால்சியம், இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளதால் இவை வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. மேலும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இவற்றை தாராளமாக தங்களது உணவுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த சோயாவை வைத்து சுண்டல், கிரேவி, சப்ஜி என்று பல விதங்களில் சமைக்கலாம். அந்த வகையில் இன்று நாம் சோயா வைத்து ஸ்பைசியான சப்ஜியை காண உள்ளோம். இதனை பூரி, சப்பாத்தி, புல்கா, சாதம் போன்றவற்றிற்கு வைத்து சாப்பிட அருமையாக இருக்கும். இது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதோடு, நாவிற்கு சுவையையும் தரக்கூடிய ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப சுலபமா வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சட்டுனு இந்த ரெசிபியை செய்திடலாம். இதனை பெரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.
காஷ்மீர் ராஜ்மா சப்ஜி | Kashmir Rajma Sabji Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 250 கி ராஜ்மா
- 1/2 கப் வெங்காயம்
- 5 தக்காளி
- 1 டீஸ்பூன் சீரகம்
- 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
செய்முறை
- முதலில் ராஜ்மாவை இரவு முழுவதும் ஊற வைத்து பின் குக்கரில் சேர்த்து 4 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியை மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இலவங்கம், ஏலக்காய், கிராம்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நாம் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் மிளகாய்த்தூள், காஷ்மீர் மிளகாய்தூள், கரம் மசாலா மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் நாம் வேக வைத்துள்ள ராஜ்மாவை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை மூடி வைத்து கொதிக்க வைக்கவும்.
- இது நன்கு கொதித்ததும் சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான ராஜ்மா சப்ஜி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான ராஜ்மா உருண்டை குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! சுடு சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்!