Home அசைவம் வீடே கமகமக்கும் படி ருசியான காசிமேடு மீன் குழம்பு இப்படி செஞ்சி பாருங்க!

வீடே கமகமக்கும் படி ருசியான காசிமேடு மீன் குழம்பு இப்படி செஞ்சி பாருங்க!

மட்டன் குழம்பு, கோழிக் குழம்பு வரிசையில் உள்ள மீன் குழம்புக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே அலாதி பிரியம் உண்டு. இந்த மணமணக்கும் மீன் குழம்புகளில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொரு பகுதிகளுக்கும், ஊர்களுக்கும் ஏற்ப மாறுபடுகிறது. பொதுவாக கடல் உணவு அனைத்து வயதினருக்கும் உகந்த உணவு. பொதுவாக அனைத்து கடல் உணவுகளிலும் கால்சியம், வைட்டமின்-டி, புரதம், தாது உப்புக்கள், ஒமேகா-3, கொழுப்பு அமிலம், எண்ணெய், துத்தநாகம் போன்றவை உள்ளன.

-விளம்பரம்-

இப்படியான டேஸ்டி மீன் குழம்புகளில் சுவை தரும் மீன்களை சேர்த்தால் அதன் சுவையே தனி தான். மீன் குழம்புகளில் ஒரு குறிப்பிட்ட மீன்களை சேர்ப்பதால் அவற்றுக்கு அந்த மீனின் பெயர்களே சூட்டப்படுகிறது. இதனை செய்யும் பொழுதே வீடு முழவதும் மணமணக்கும். இதனை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

மறுநாள் வைத்து சாப்பிட்டால் இன்னுமும் டேஸ்டாக இருக்கும். அதுவும் மறு நாள் வைத்து தோசைக்கோ, இட்லிக்கோ அல்லது சாதத்தில்லோ ஊற்றி சாப்பிட்டால் அதனின் ருசியே தனி தான். இந்த மீன் குழம்பை வெவ்வேறு பகுதிகளில் அவரவர் உணவு முறைக்கு ஏற்ப வெவ்வேறு மசாலாக்கள் மற்றும் அங்கு கிடைக்கும் மீன் வகைகளை கொண்டு செய்கிறார்கள். அந்த வகையில் நாம் இன்று காசிமேடு சங்கரா மீன் குழம்பு எப்படி வீட்டிலேயே சுவையாக எப்படி வைப்பது என்று பார்ப்போம்.

Print
5 from 1 vote

காசிமேடு மீன் குழம்பு | kasimedu fish curry

மட்டன் குழம்பு, கோழிக் குழம்பு வரிசையில் உள்ள மீன் குழம்புக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே அலாதி பிரியம் உண்டு. இந்த மணமணக்கும் மீன் குழம்புகளில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொரு பகுதிகளுக்கும், ஊர்களுக்கும் ஏற்ப மாறுபடுகிறது. பொதுவாக கடல் உணவு அனைத்து வயதினருக்கும் உகந்த உணவு. பொதுவாக அனைத்து கடல் உணவுகளிலும் கால்சியம், வைட்டமின்-டி, புரதம், தாது உப்புக்கள், ஒமேகா-3, கொழுப்பு அமிலம், எண்ணெய், துத்தநாகம் போன்றவை உள்ளன. மீன் குழம்புகளில் ஒரு குறிப்பிட்ட மீன்களை சேர்ப்பதால் அவற்றுக்கு அந்த மீனின் பெயர்களே சூட்டப்படுகிறது. இதனை செய்யும் பொழுதே வீடு முழவதும் மணமணக்கும். இதனை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian, tamil nadu
Keyword: fish curry
Yield: 5 People
Calories: 124kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 சங்கரா மீன்
  • உப்பு                              தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1 பெரிய வெங்காயம்
  • 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/4 டீஸ்பூன் கடுகு                            
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 15 பல் பூண்டு
  • 1 தக்காளி                      
  • புளி எலுமிச்சை அளவு
  • 1 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  • 1 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 2 பச்சை மிளகாய்

செய்முறை

  • முதலில் மீனை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் ஊற விடவும்.
  • வெங்காயத்தை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  • பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் சேர்த்து தாளித்து, அரைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கி அதனுடன் சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • சிறிது நேரம் கழித்து தக்காளியை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து அதில் சேர்த்து கொள்ளவும்.
  • பின் அதில் மிளகாய்த்தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
  • பின் குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். குழம்பின் பச்சை வாசனை போனதும் புளியை ஊற வைத்து அதன் தண்ணீரை சேர்த்து மீண்டும் 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
  • குழம்பு நன்கு கொதிக்கும் போது பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பின் ஊற வைத்த மீனையும் சேர்த்து மூடி போட்டு 10 நிமிடங்கள் வரை வேக விடவும். ‌
  • அவ்வளவுதான் சுவையான காசிமேடு மீன் குழம்பு தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 124kcal | Protein: 20.6g | Fat: 4g | Cholesterol: 40mg | Sodium: 76.5mg | Potassium: 427mg | Fiber: 0.2g | Vitamin A: 31IU | Calcium: 52mg | Iron: 2.38mg