Advertisement
சைவம்

வட இந்திய ஸ்டைல் கத்திரிக்காய் மசியல் செய்வது எப்படி ?

Advertisement

கத்திரிக்காயைக் கொண்டு புளிக்கொழம்பு, சாம்பார், பொரியல் செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் கத்திரிக்காயைக் கொண்டு மசியல் செய்து பருக்கள். அதிலும் வட இந்திய ஸ்டைலில் மசியல் செய்து பாருங்கள்.இங்கு அந்த வட இந்திய ஸ்டைல் கத்திரிக்காய் மசியல் தான் கொடுக்கப்படுள்ளது. இந்த கத்திரிக்காய் மசியல் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : சுவையான கத்தரிக்காய் மிளகு கறி செய்வது எப்படி ?

Advertisement

மேலும் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பபி சாப்பிடுமாறும் இருக்கும். ஏன் உங்கள் வீட்டில் உள்ள சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும். அதனால் இன்று இந்த வடஇந்திய கத்தரிக்காய் மசியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கத்திரிக்காய் மசியல்| Kathirikai Masiyal Recipe in Tamil

Print Recipe
கத்திரிக்காயைக் கொண்டு புளிக்கொழம்பு, சாம்பார், பொரியல் செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் கத்திரிக்காயைக் கொண்டு மசியல் செய்து பருக்கள். அதிலும் வட இந்திய ஸ்டைலில் மசியல் செய்து பாருங்கள்.இங்கு அந்த வட இந்திய ஸ்டைல் கத்திரிக்காய் மசியல் தான் கொடுக்கப்படுள்ளது. இந்த கத்திரிக்காய் மசியல் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பபி சாப்பிடுமாறும் இருக்கும். ஏன் உங்கள் வீட்டில் உள்ள சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும்.
Course Gravy
Cuisine Indian, TAMIL
Keyword brinjal curry, கத்திரிக்காய் மசியல்
Prep Time 5 minutes
Cook Time 15 minutes
Total Time 20 minutes
Servings 4 people
Calories 124

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கத்திரிக்காய் பெரியது
  • 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 8 பல் பூண்டு பொடியாக நறுக்கியது
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பேஸ்ட்
  • 1 தக்காளி நறுக்கியது
  • 3 பச்சைமிளகாய் நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகப் பொடி
  • ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • ½ டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ டேபிள் ஸ்பூன்
    Advertisement
    கரம் மசாலா
  • 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி நறுக்கியது
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

Instructions

  • முதலில் கத்திரிக்காயை நன்கு சுத்தமாக கழுவி, அதனை கத்தி கொண்டு லேசாக கீறி விட வேண்டும்.
  • பின் அதில் எண்ணெய் தடவி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் தடவி வைத்துள்ள கத்திரிக்காயை போட்டு, கத்திரிக்காய் கருப்பாக மாறும் வரை நன்கு வறுத்து இறக்கி வைக்க வேண்டும்.
  • பிறகு அதன் தோலை நீக்கி விட்டு, அதனை கையால் மசித்துக் கொள்ள வேண்டும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • அடுத்து இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப்பொடி, சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
  • பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட்டு மசித்து வைத்துள்ள கத்திரிக்காயைப் போட்டு, 2-3 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கத்திரிக்காய் மசியல் ரெடி!!!

Nutrition

Serving: 4people | Calories: 124kcal | Carbohydrates: 63g | Protein: 14.7g | Fat: 7.8g | Sodium: 29mg | Potassium: 397mg | Fiber: 3.2g | Sugar: 2.9g
Advertisement
swetha

Recent Posts

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

4 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

4 மணி நேரங்கள் ago

முள்ளங்கி துவையல் இப்படி செஞ்சு பாருங்க. அது முள்ளங்கி தொகைகள் தான் அப்படின்னு கண்டுபிடிக்கவே முடியாது

முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன…

4 மணி நேரங்கள் ago

மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க்…

5 மணி நேரங்கள் ago

பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…

7 மணி நேரங்கள் ago

அடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!

கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம்…

8 மணி நேரங்கள் ago