- Advertisement -
கத்திரிக்காயைக் கொண்டு புளிக்கொழம்பு, சாம்பார், பொரியல் செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் கத்திரிக்காயைக் கொண்டு மசியல் செய்து பருக்கள். அதிலும் வட இந்திய ஸ்டைலில் மசியல் செய்து பாருங்கள்.இங்கு அந்த வட இந்திய ஸ்டைல் கத்திரிக்காய் மசியல் தான் கொடுக்கப்படுள்ளது. இந்த கத்திரிக்காய் மசியல் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : சுவையான கத்தரிக்காய் மிளகு கறி செய்வது எப்படி ?
- Advertisement -
மேலும் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பபி சாப்பிடுமாறும் இருக்கும். ஏன் உங்கள் வீட்டில் உள்ள சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும். அதனால் இன்று இந்த வடஇந்திய கத்தரிக்காய் மசியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கத்திரிக்காய் மசியல்| Kathirikai Masiyal Recipe in Tamil
கத்திரிக்காயைக் கொண்டு புளிக்கொழம்பு, சாம்பார், பொரியல் செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் கத்திரிக்காயைக் கொண்டு மசியல் செய்து பருக்கள். அதிலும் வட இந்திய ஸ்டைலில் மசியல் செய்து பாருங்கள்.இங்கு அந்த வட இந்திய ஸ்டைல் கத்திரிக்காய் மசியல் தான் கொடுக்கப்படுள்ளது. இந்த கத்திரிக்காய் மசியல் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பபி சாப்பிடுமாறும் இருக்கும். ஏன் உங்கள் வீட்டில் உள்ள சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும்.
Yield: 4 people
Calories: 124kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கத்திரிக்காய் பெரியது
- 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 8 பல் பூண்டு பொடியாக நறுக்கியது
- 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பேஸ்ட்
- 1 தக்காளி நறுக்கியது
- 3 பச்சைமிளகாய் நறுக்கியது
- உப்பு தேவையான அளவு
- 1 டேபிள் ஸ்பூன் சீரகப் பொடி
- ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
- ½ டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
- ½ டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
- 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி நறுக்கியது
- 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
செய்முறை
- முதலில் கத்திரிக்காயை நன்கு சுத்தமாக கழுவி, அதனை கத்தி கொண்டு லேசாக கீறி விட வேண்டும்.
- பின் அதில் எண்ணெய் தடவி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் தடவி வைத்துள்ள கத்திரிக்காயை போட்டு, கத்திரிக்காய் கருப்பாக மாறும் வரை நன்கு வறுத்து இறக்கி வைக்க வேண்டும்.
- பிறகு அதன் தோலை நீக்கி விட்டு, அதனை கையால் மசித்துக் கொள்ள வேண்டும்.
- பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
- அடுத்து இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப்பொடி, சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
- பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட்டு மசித்து வைத்துள்ள கத்திரிக்காயைப் போட்டு, 2-3 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கத்திரிக்காய் மசியல் ரெடி!!!
Nutrition
Serving: 4people | Calories: 124kcal | Carbohydrates: 63g | Protein: 14.7g | Fat: 7.8g | Sodium: 29mg | Potassium: 397mg | Fiber: 3.2g | Sugar: 2.9g