கத்திரிக்காய் பொரியல் 10 நிமிடத்தில் மதிய சாதத்துக்கு சுவையாக இனி இப்படி செஞ்சி வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்க.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : கிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் பொடிக்கறி இப்படி செய்து பாருங்க!
சாம்பார் வைத்து சுட சுட சாதத்துடன் சேர்த்து இந்த் கத்திரிக்காய் பொரியல் சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
கத்திரிக்காய் பொரியல் | Kathirikai Poriyal Recipe In Tamil
கத்திரிக்காய் பொரியல் 10 நிமிடத்தில் மதிய சாதத்துக்கு சுவையாக இனி இப்படி செஞ்சி வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. சாம்பார் வைத்து சுட சுட சாதத்துடன் சேர்த்து இந்த் கத்திரிக்காய் பொரியல் சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
Yield: 4 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- ¼ கிலோ கத்திரிக்காய்
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள் காரத்திற்கேற்ப
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் கத்திரிக்காயை கழுவி சுத்தம் செய்து நறுக்கி தண்ணீரில் போடவும். ஏனென்றால் கத்திரிக்காய் கறுத்துவிடும்.
- அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து நன்கு எண்ணைலயே வதக்கவும்
- பாதி வெந்ததும் காரத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் உப்பு சேர்த்து மெதுவாக கிளறிவிடவும்.
- பிறகு சிறுது நேரம் கழித்து மீண்டும் கிளறவும் கத்திரிக்காய் நன்கு வெந்ததும் அடுப்பை நிறுத்தவும்.