Home Uncategorized சிம்பிளா சாதத்துக்கு இந்த கெட்டி பருப்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

சிம்பிளா சாதத்துக்கு இந்த கெட்டி பருப்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

பொதுவா நம்ம ஹோட்டலுக்கு போனோம் அப்படின்னா அங்க ஃபர்ஸ்ட் நமக்கு கொடுக்கிறது கெட்டி பருப்பு தான் அந்த கெட்டி பருப்பை சாதத்தில் போட்டு அதுக்கு மேல நெய் ஊத்தி சாப்ட்டா டேஸ்ட் அல்டிமேட் ஆக இருக்கும் அப்படின்னு சொல்லலாம். அதுமட்டுமில்லாம கொஞ்சம் காரம் கம்மியா போட்டு இந்த கெட்டி பருப்பு வெச்சோம் அப்படின்னா அத சின்ன குழந்தைகளுக்கும் ஊட்டி விடலாம். டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும் சின்ன குழந்தைகளும் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

பொதுவா இந்த கெட்டி பருப்பு வச்சு கூடவே ரசம் அதுக்கு தொட்டுக்க அப்பளம் இல்லனா வடகம் ஏதாவது செஞ்சு வச்சுட்டா போதும் சின்ன குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் நீ ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. ரொம்ப வே சிம்பிளான ரெசிப்பியா இருந்தாலும் டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும் ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம் அந்த அளவுக்கு டேஸ்ட் அதிகமா இருக்கும். வீட்ல நிறைய வேலைகள் இருக்கு சாப்பாடு செய்வதற்கு லேட் ஆகுது அப்படின்னா டக்குனு இந்த கெட்டி பருப்பு வச்சு கூட வத்தல் வறுத்து சாப்பிட்டுக்கோங்க சிம்பிளான லஞ்ச் இருந்தாலும் டேஸ்டான லஞ்ச் ஆக இருக்கும்.

குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ்க்கு கூட இந்த ரெசிபி கொடுத்து விடலாம் கண்டிப்பா மாலை நேரத்தில் வீட்டுக்கு வரும்போது டிபன் பாக்ஸ் காலியாகி தான் வரும். குழந்தைகளுக்கு இந்த கெட்டிப்பருப்பை கொடுத்து விடும்போது கூடவே உருளைக்கிழங்கு இல்லைனா வாழைக்காய் ஃப்ரை செஞ்சு கொடுத்தா போதும் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான கெட்டி பருப்பு 15 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

Print
5 from 2 votes

கெட்டி பருப்பு | Keddi Paruppu Recipe In Tamil

பொதுவா இந்த கெட்டி பருப்பு வச்சு கூடவே ரசம் அதுக்கு தொட்டுக்க அப்பளம் இல்லனா வடகம் ஏதாவது செஞ்சுவச்சுட்டா போதும் சின்ன குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் நீ ரொம்பவிரும்பி சாப்பிடுவாங்க. ரொம்ப வே சிம்பிளான ரெசிப்பியா இருந்தாலும் டேஸ்ட் ரொம்ப சூப்பராஇருக்கும் ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம் அந்த அளவுக்கு டேஸ்ட் அதிகமா இருக்கும்.வீட்ல நிறைய வேலைகள் இருக்கு சாப்பாடு செய்வதற்கு லேட் ஆகுது அப்படின்னா டக்குனு இந்தகெட்டி பருப்பு வச்சு கூட வத்தல் வறுத்து சாப்பிட்டுக்கோங்க சிம்பிளான லஞ்ச் இருந்தாலும்டேஸ்டான லஞ்ச் ஆக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Keddi Paruppu
Yield: 4
Calories: 60kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் துவரம் பருப்பு
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கருவேப்பிலை

செய்முறை

  • துவரம் பருப்பை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் சேர்த்தால் இரண்டு விசில் விடவும்.
  • வேக வைத்துள்ள பருப்பில் சீரகம் மற்றும் மிளகாய் சிறிதளவு பொடியாக்கி சேர்த்துக் கொள்ளவும் தேவையானஅளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கி பருப்பில் சேர்த்து விடவும்.
  • இப்பொழுது சுவையான கெட்டி பருப்பு தயார் சுடு சாதத்துடன் கெட்டி பருப்பும் நெய்யும் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

Nutrition

Serving: 500g | Calories: 60kcal | Carbohydrates: 17g | Protein: 10g | Sodium: 209mg | Potassium: 362mg | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு சூப்பரான சிறுதானிய பருப்பு அடை இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!