Home காலை உணவு இரவு டிபனுக்கு சூப்பரான சிறுதானிய பருப்பு அடை இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

இரவு டிபனுக்கு சூப்பரான சிறுதானிய பருப்பு அடை இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இருப்பினும் கொஞ்சம் சிரமப்பட்டு வாரத்தில் ஒரு முறையாவது சிறுதானிய வகைகளை உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுதானியங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. சிறுதானியங்கள் வைத்து செய்யக்கூடிய அனைத்து உணவுகளும் நமக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் தான். சத்துக்கள் நிறைந்த பொருட்களில் ருசி கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ருசி நிறைந்த பொருட்களில், சத்துக்கள் மிக மிகக் குறைவு. ஆனால் இது நம்மில் பல பேருக்கு தெரியாது. நாவிற்கு ருசியை தரும் பொருட்களாக தேடித்தேடி சாப்பிடுவோம். இனி உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களில், ருசி கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. நம்முடைய உணவோடு சேர்த்துக் கொள்ளலாம். சிறுதானியங்களில் அதிக அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ரிபோஃப்ளோவின், நாயசின், வைட்டமின்கள், தாதுப்புக்கள், மாவுச்சத்து, வைட்டமின் B12, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இரத்த சோகைப் பிரச்சனைக்குத் சிறந்த தீர்வை தருகிறது. சிறுதானியம் வைத்து கஞ்சி, களி, புட்டு என்று பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம். வழக்கமாக நாம் ராகி அடை, பருப்பு அடை என்று செய்து சாப்பிட்டு இருப்போம். மேலும் ஏராளமான மருத்துவ பயன்களை கொண்டுள்ள சிறுதானியத்தில் இன்று நாம் பாரம்பரிய முறையில் அடையை வீட்டில் சுவையாகவும் எளிமையாகவும் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-
Print
4 from 1 vote

சிறுதானிய பருப்பு அடை | Sirudhaniya Paruppu Adai Recipe In Tamil

தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இருப்பினும் கொஞ்சம் சிரமப்பட்டு வாரத்தில் ஒரு முறையாவது சிறுதானிய வகைகளை உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். சத்துக்கள் நிறைந்த பொருட்களில் ருசி கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ருசி நிறைந்த பொருட்களில், சத்துக்கள் மிக மிகக் குறைவு. ஆனால் இது நம்மில் பல பேருக்கு தெரியாது. நாவிற்கு ருசியை தரும் பொருட்களாக தேடித்தேடி சாப்பிடுவோம். இனி உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களில், ருசி கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. நம்முடைய உணவோடு சேர்த்துக் கொள்ளலாம். வழக்கமாக நாம் ராகி அடை, பருப்பு அடை என்று செய்து சாப்பிட்டு இருப்போம். மேலும் ஏராளமான மருத்துவ பயன்களை கொண்டுள்ள சிறுதானியத்தில் இன்று நாம் பாரம்பரிய முறையில் அடையை வீட்டில் சுவையாகவும் எளிமையாகவும் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: Sirudhaniya Paruppu Adai
Yield: 3 People

Equipment

  • 1 பவுள்
  • 1 கிரைண்டர்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 கப் குதிரைவாலி
  • 1 கப் தினை
  • 1 கப் இட்லி அரிசி
  • 1/4 கப் உளுந்து
  • 1 கப் துவரம் பருப்பு
  • 3/4 கப் கடலை பருப்பு
  • 1/4 கப் சவ்வரிசி
  • 10 வர‌ மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • கறிவேப்பில்லை, கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் குதிரை வாலி, திணை இரண்டையும் ஒன்றாக கலந்து நன்கு அலசி விட்டு ஊற வைத்து கொள்ளவும்.
  • பின் துவரம் பருப்பு, கடலை பருப்பு, இட்லி அரிசி, உளுந்து, சவ்வரிசி ஆகியவற்றை கலந்து கழுவிய பின் காய்ந்த மிளகாய் சேர்த்து ஊற வைக்கவும்.
  • பின் கிரைண்டரில் மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதன்பிறகு துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி, உளுந்து, சவ்வரிசி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • இவை சிறிது அரைபட்டதும் தினை மற்றும் குதிரைவாலியை சேர்த்து இவை அனைத்தையும் ரவையை விட சற்று கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் இதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி‌ அதற்கு தேவையான அளவு உப்பு, பெருங்காயம், பொடியாக நறுக்கிய கொத்த மல்லி, புதினா சேர்த்து 1 மணி நேரம் வரை அப்படியே வைத்து விடவும்.
  • பின் ஒரு‌ தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் அடை வார்த்து நல்லெண்ணெய் ஊற்றி இருபுறமும் சுட்டு பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சிறுதானிய அடை தயார்.

Nutrition

Serving: 400g | Carbohydrates: 6.9g | Protein: 11.2g | Fat: 4.3g | Saturated Fat: 1.7g | Sodium: 7.6mg | Potassium: 195mg | Fiber: 8g | Vitamin A: 33IU | Vitamin C: 48mg | Calcium: 41mg | Iron: 6mg

இதனையும் படியுங்கள் : காஞ்சிபுரம் சிறுதானிய இட்லி இப்படி செய்து பாருங்க! 2 இட்லி அதிகமாகவே சாப்பிடுவாங்க!