Home அசைவம் ருசியான KFC பக்கெட் சிக்கன் சுலபமாக வீட்டிலயே செய்யலாம் வாங்க! இதன் ருசியே தனி தான்!

ருசியான KFC பக்கெட் சிக்கன் சுலபமாக வீட்டிலயே செய்யலாம் வாங்க! இதன் ருசியே தனி தான்!

என்னதான் நாம்ம சிக்கன்ல புதுவிதமா உணவுகள் செய்து கொடுத்தாலும் குழந்தைகள் விரும்புவது என்னவோ கேஎஃப்சி பக்கெட் சிக்கென தான் .அந்த கேஎஃப்சி பக்கெட் சிக்கென அதே சுவையில வீட்ல எப்படி சுலபமா செய்யறதுன்னு தெரிஞ்சுக்க இருக்கோம். என்னதான் இந்தியாவுக்காக கேஎஃப்சி தன்னுடைய உணவுகள் நிறைய மாற்றங்களை கொண்டு வந்து கொடுத்தாலும் எல்லாரும் உணவுகளையும் எல்லாரும் விரும்பி சாப்பிட்டாலும் இந்த கேஎஃப்சி உணவுகளில் முதலிடம் பிடிக்கிறது கேஎஃப்சியோட பக்கெட் சிக்கன் தான்.

-விளம்பரம்-

சில வருடங்களுக்கு முன்னாடி வரைக்கும் ஏதாவது ஒரு விருந்துகள் பண்டிகைகள் அப்படினா சைவ உணவுகள் இருந்தது அதுக்கு அப்புறம் படிப்படியாக அசைவம் உணவுகள் வந்தது இப்போ பிரியாணிகள் வந்துச்சு அப்படி போயிட்டு இருந்த இடங்களில இப்போ எல்லாம் ஏதாவது ஒரு ட்ரீட் இல்ல வீட்ல விசேஷம் கொஞ்சம் பேர் கூட சேர்த்து கொண்டாட  போறோம் அப்படின்ற பட்சத்துல எல்லாரும் கேஎஃப்சி லேந்து உணவுகஹ ஆர்டர் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.

அந்த மாதிரி கேஎஃப்சி உணவுகள் அதிகமாக விரும்பப்படுற கேஎஃப்சி பாக்கெட் சிக்கன் எப்படி செய்வது அப்படிங்கறது தான் இந்த பதிவுல நாம பார்க்க இருக்கிறோம். என்னதான் கடைகளில் வாங்கி சாப்பிட்டாலும் நமக்கும் சில உணவுகளை வீடுகளில் செய்து நம்ம குடும்பத்தாரோட ஒண்ணா உக்காந்து சாப்பிடனும் அப்படிங்கிற ஆசை நிறையவே இருக்கும். அப்படிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு தான் இந்த கேஎஃப்சி பக்கெட் சிக்கென நம்ம செய்ய இருக்கோம். சரி வாங்க இந்த கேஎஃப்சி பக்கெட் சிக்கன எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
3.63 from 8 votes

கேஎஃப்சி பக்கெட் சிக்கன் | KFC Bucket Chicken In Tamil

கேஎஃப்சி பக்கெட் சிக்கென அதே சுவையில வீட்ல எப்படி சுலபமா செய்யறதுன்னு தெரிஞ்சுக்க இருக்கோம்.என்னதான் இந்தியாவுக்காக கேஎஃப்சி தன்னுடைய உணவுகள் நிறைய மாற்றங்களை கொண்டு வந்துகொடுத்தாலும் எல்லாரும் உணவுகளையும் எல்லாரும் விரும்பி சாப்பிட்டாலும் இந்த கேஎஃப்சிஉணவுகளில் முதலிடம் பிடிக்கிறது கேஎஃப்சியோட பக்கெட் சிக்கன் தான். அப்படிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு தான் இந்த கேஎஃப்சி பக்கெட் சிக்கென நம்ம செய்ய இருக்கோம்.சரி வாங்க இந்த கேஎஃப்சி பக்கெட் சிக்கன எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: snacks, starters
Cuisine: tamil nadu
Keyword: கேஎஃப்சி பக்கெட் சிக்கன்
Yield: 4
Calories: 99.93kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 அகல பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1 கிலோ சிக்கன்
  • 1 கப் தயிர்
  • 2 முட்டை
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 ஸ்பூன் கறிமசாலா தூள்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 எலுமிச்சை
  • 1 கப் மைதாமாவு
  • 1/4 கப் சோளமாவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சிக்கனை சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு குத்து கரண்டியை வைத்து சிக்கனைநன்றாக குத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மசாலாக்கள் சிக்கன் உள்ளே இறங்கும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் தயிர் சேர்த்து அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும் .
  • அந்த கலவையில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள் , கறி மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். பிறகு அந்த கலவையில் இஞ்சி பூண்டு விழுது அரை எலுமிச்சை பழத்தை பிழிந்துசாறு  சேர்த்து இவற்றை சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
  • கலந்து வைத்துள்ள மசாலா கலவையில் சுத்தம் செய்து குத்திவைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து ஃப்ரிட்ஜில் ஒரு மூன்று மணி நேரம்ஊற வைக்கவும்
  • பிறகு ஒரு பாத்திரத்தில் மைதா மாவு சோள மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதில் மிளகாய்தூள் , மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • 3 மணி நேரம் ஊறிய சிக்கன் துண்டுகளை எடுத்து மைதா மாவில் முதலில் பிரட்டி இன்னொரு பாத்திரத்தில்நீர் வைத்துக்கொண்டு பிரட்டி வைத்துள்ள மைதா மாவு சிக்கனல  அந்த நீரில் போட்டு மூழ்க வைத்தூ எடுத்து  கொள்ளவும்.
  •  
    தண்ணீரில் மூழ்க வைத்து எடுத்த சிக்கன் துண்டுகளை மீண்டும் மைதா மாவில் நன்றாக பிரட்டி எடுத்துமைதா மாவை உதற வேண்டும்.
     
  • ஒரு கடாயில் எண்ணெய் வைத்து எண்ணெய் காய்ந்ததும் இரண்டாவது முறை மைதாவில் பிசிறி உதறி எடுத்து வைத்துள்ளசிக்கன் துண்டுகளை பொரித்து எடுத்தால் கேஎஃப்சி ஸ்டைலில் பக்கெட் சிக்கன் ருசியாக தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 99.93kcal | Carbohydrates: 13.91g | Protein: 3.49g | Fat: 2.49g | Sodium: 54.88mg | Potassium: 77.95mg | Fiber: 1.27g | Vitamin C: 606mg | Calcium: 24.71mg | Iron: 0.21mg