Advertisement
அசைவம்

சுவையான கொச்சி இறால் தொக்கு இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். அசைவ வகையில் இந்த சுவையான இறால்

இதையும் படியுங்கள் : கிராமத்து ஸ்டைல் இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி ?

Advertisement

தொக்கு ஒன்று,இந்த சுவையான இறால் தொக்கு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த இறால் தொக்கு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கொச்சி இறால் தொக்கு | Iral Thokku Receipe in Tamil

Print Recipe
வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். அசைவ வகையில் இந்த சுவையான இறால் தொக்கு ஒன்று,இந்த சுவையான இறால் தொக்கு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course dinner, LUNCH
Cuisine Indian, Kochi
Keyword thokku, இறால்
Prep Time 15 minutes
Cook Time 20 minutes
Total Time 35 minutes
Servings 4 people
Calories 212

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Ingredients

  • 300 gm சுத்தம் செய்த இறால்
  • 3 tbsp தேங்காய் எண்ணெய்
  • ½ tsp சோம்பு
  • 2 கொத்து கருவேப்பிலை           
    Advertisement
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 தக்காளி
  • 2 tsp மிளகாய்த்தூள்
  • ½ tsp கரம் மசாலா
  • 1 tsp மல்லி தூள்
  • ½ tsp மஞ்சள் தூள்
  • 25 gm கொத்தமல்லி இலைகள்
  • தேவையான அளவு உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில்கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் 1/2 தேக்கரண்டி சோம்பு சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும். வெங்காயம் மென்மையாகும் வரை
    Advertisement
    வதக்கி கொள்ளவும். அதனுடன் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போன பின்னர் ஒரு தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.தக்காளி மென்மையாகும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
  • பின் அதனுடன் தேவையான அளவு உப்பு, தேக்கரண்டி மிளகாய் தூள், தேக்கரண்டி கரம் மசாலா, தேக்கரண்டி மல்லித்தூள், தேக்கரண்டி மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.
  • பிறகு நன்கு கலந்த பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் கலக்கவும். மசாலா கொதிக்கும் பொழுது மீண்டும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • மசாலாவில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவைக்கவும். இப்போது 400 கிராம் இறாலை சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ளவும்.
  • இறால் மற்றும் மசாலா நன்கு கலக்கும்படி கலந்து கொள்ளவும். இப்பொழுது மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்
  • கடைசியாக கொத்தமல்லி சிறிதளவு தூவி அடுப்பை அணைத்து விடவும். சுவையான இறால் தொக்கு தயார்.இதை சாதத்துடன்வைத்து சாபிட்டால் அதன் சுவை அபாரமாக இருக்கும்.

Nutrition

Serving: 300g | Calories: 212kcal | Carbohydrates: 123g | Protein: 47.9g | Fat: 4.3g | Cholesterol: 23mg | Sodium: 3.4mg | Potassium: 1.2mg | Vitamin A: 4.3IU | Calcium: 12.3mg
Advertisement
Prem Kumar

Recent Posts

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

54 நிமிடங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

4 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

5 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

9 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

18 மணி நேரங்கள் ago