- Prep
- 15 min
- Cook
- 20 min
- Total
- 35 min
- Serves
- 4
- Cuisine
- Indian, Kochi
- Course
- dinner, LUNCH
வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். அசைவ வகையில் இந்த சுவையான இறால்
இதையும் படியுங்கள் : கிராமத்து ஸ்டைல் இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி ?
தொக்கு ஒன்று,இந்த சுவையான இறால் தொக்கு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த இறால் தொக்கு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில்கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் 1/2 தேக்கரண்டி சோம்பு சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும். வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும். அதனுடன் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போன பின்னர் ஒரு தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.தக்காளி மென்மையாகும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் தேவையான அளவு உப்பு, தேக்கரண்டி மிளகாய் தூள், தேக்கரண்டி கரம் மசாலா, தேக்கரண்டி மல்லித்தூள், தேக்கரண்டி மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.
பிறகு நன்கு கலந்த பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் கலக்கவும். மசாலா கொதிக்கும் பொழுது மீண்டும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மசாலாவில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவைக்கவும். இப்போது 400 கிராம் இறாலை சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ளவும்.
இறால் மற்றும் மசாலா நன்கு கலக்கும்படி கலந்து கொள்ளவும். இப்பொழுது மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்
கடைசியாக கொத்தமல்லி சிறிதளவு தூவி அடுப்பை அணைத்து விடவும். சுவையான இறால் தொக்கு தயார்.இதை சாதத்துடன்வைத்து சாபிட்டால் அதன் சுவை அபாரமாக இருக்கும்.






