ருசியான கொண்டக் கடலை சாதம் இனி இப்படி செஞ்சி பாருங்க! அருமையான டிபன் பாக்ஸ் ரெசி!

- Advertisement -

குழம்பு சாதம் இந்தியாவில் மக்கள் அன்றாடம் செய்து உண்ணும் உணவு முறை. குறிப்பாக தென்னிந்தியாவில் அனைவரது இல்லங்களிலும் வழக்கமாக குழம்பு சாதம் தான் செய்து உண்பார்கள். பல விதமான சாதம் உள்ளது அதில் சாம்பார் சாதம், பருப்பு சாதம், புளி சாதம், தக்காளி சாதம் போன்றவற்றை மக்கள் வழக்கமாக செய்து சுவைப்பார்கள். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான கொண்டைக்கடலை சாதம்.

-விளம்பரம்-

இந்த சாதத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் வெறும் கொண்டைக்கடலை, வெங்காயம், மற்றும் தக்காளி இருந்தால் போதும் இதை நாம் வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்து விடலாம். கொண்டைக்கடலையில் உடம்பிற்கு மிகவும் அவசியமான புரதசத்து நிறைந்திருப்பதால் இவை நம் உடம்பிற்கு மிகவும் நல்லது. அது மட்டுமின்றி நாம் வழக்கமாக செய்து உண்ணும் குழம்புகளுக்கு இவை ஒரு அருமையான மாற்றும் கூட.

- Advertisement -

நாம் உணவுச் சங்கிலியில் பயிறு வகைகள் எப்போதும் இன்றியமையாத ஒரு உணவு பொருளாக பாரம்பரியமாக இருந்து வருகிறது. கொண்டைக்கடலையை வைத்து பலவிதமான ரெசிபிகளை செய்யலாம். கடலைக்கறி, சென்னா மசாலா, கொண்டைக்கடலை பிரியாணி என ஏராளமான ரெசிபிக்கள் செய்ய முடியும். கொண்டைக்கடலை வைத்து செய்யும் ரெசிபிக்கள் சுவையாக இருப்பதோடு உடலுக்கும் நன்மை தரக்கூடியது. இந்த கொண்டை கடலையை வைத்து எப்படி சுவையான சாதம் செய்யலாம் என்பதை பார்ப்போம்.

Print
4.34 from 3 votes

கொண்டக்கடலை சாதம் | Kondakadalai saatham recipe in tamil

குழம்பு சாதம் இந்தியாவில் மக்கள் அன்றாடம் செய்து உண்ணும் உணவு முறை. குறிப்பாக தென்னிந்தியாவில் அனைவரது இல்லங்களிலும் வழக்கமாக குழம்பு சாதம் தான் செய்து உண்பார்கள். பல விதமான சாதம் உள்ளது அதில் சாம்பார் சாதம், பருப்பு சாதம், புளி சாதம், தக்காளி சாதம் போன்றவற்றை மக்கள் வழக்கமாக செய்து சுவைப்பார்கள். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான கொண்டைக்கடலை சாதம். இந்த சாதத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் வெறும் கொண்டைக்கடலை, வெங்காயம், மற்றும் தக்காளி இருந்தால் போதும் இதை நாம் வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்து விடலாம். அது மட்டுமின்றி நாம் வழக்கமாக செய்து உண்ணும் சாதத்திற்கு இவை ஒரு அருமையான மாற்றும் கூட.
Prep Time10 minutes
Active Time20 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian, tamil nadu
Keyword: kondakadalai satham
Yield: 4 People
Calories: 164kcal

Equipment

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கொண்டைக்கடலை
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 பிரியாணி இலை
  • 1 பட்டை
  • 2 தக்காளி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 கப் அரிசி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொண்டைக்கடலை ஒரு பவுளில் சேர்த்து 6 முதல் 7 மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.
  • பிறகு ஊர வைத்த கொண்டைக்கடலை குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், பட்டை மற்றும் பிரியாணி இலை சேர்த்து 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி, உப்பு, மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • அரிசியை நன்கு கழுவி சிறிது நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து கடாயில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும்.
  • தண்ணீர் வற்றியதும் வேக வைத்த கொண்டைக்கடலை சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேக வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கொண்டைக்கடலை சாதம் தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 164kcal | Carbohydrates: 2.4g | Protein: 8.9g | Fat: 2.6g | Saturated Fat: 0.3g | Potassium: 291mg | Vitamin A: 27IU | Vitamin C: 1.3mg | Calcium: 49mg | Iron: 2.9mg