Advertisement
சைவம்

கொங்கு நாட்டு ருசியான பருப்பு சோறு இப்படி செய்து பாருங்க! மதிய உணவுக்கு அசத்தலாக இருக்கும்!

Advertisement

தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் பெரிவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் படியாக சுவையான கொங்கு நாட்டு அரிசி பருப்பு சோறு செய்து சாப்பிட்டு பாருங்கள்.குழந்தைகள் முதல்

இதையும் படியுகள்: கிராமத்து ஸ்டைல் உளுந்தம் சோறு இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

பெரியவர்கள் வரை உளுந்து சோறு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த கொங்கு நாட்டு அரிசி பருப்பு சோறு செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கொங்கு நாட்டு பருப்பு சோறு | Kongunadu Paruppu Soru Receipe in Tamil

Print Recipe
தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் பெரிவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் படியாக சுவையான கொங்கு நாட்டு அரிசி பருப்பு சோறு செய்து சாப்பிட்டு பாருங்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொங்கு நாட்டு அரிசி பருப்பு சோறு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Arisi Paruppu Soru, அரிசி பருப்பு சோறு
Advertisement
Prep Time 20 minutes
Cook Time 15 minutes
Total Time 35 minutes
Servings 4 people
Calories 653

Equipment

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 1 cup அரிசி
  • ¼ cup துவரம் பருப்பு
  • 10 சின்ன வெங்காயம்
  • 15 பூண்டு
  • 1 தக்காளி
  • ½ tsp கடுகு
  • 3 பச்சை மிளகாய்
  • ¼ tsp உளுத்தம் பருப்பு
  • ½ tsp சீரகம்
  • ½ tsp கடலை பருப்பு
  • ¼ tsp பெருங்காயத்தூள்
  • 3 மிளகாய் வற்றல்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • கொத்தமல்லி சிறிதளவு
  • தேவையான அளவு தண்ணீர்
  • உப்பு சிறிதளவு

Instructions

  • அரசி பருப்பு சாதம் செய்ய முதலில் அரிசி, துவரம் பருப்பு நன்றாக கழுவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • பின் குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • கருவேப்பிலையை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஊற வைத்த அரிசி, பருப்பை அதில் சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும்,
  • அதில் அரிசி ஒரு கப்புக்கு 1.5 கப் தண்ணீர் விகிதம் என்ற அடிப்படையில் பருப்பும் சேர்ந்துள்ளதால் இரண்டரை கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். கலவைக்கு தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
  • குக்கரில் 3 விசில் வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.குக்கரை திறந்ததும் கொத்தமல்லி இலையை தூவ வேண்டும்.இப்பொழுது சுவையான அரிசி பருப்பு சாதம் தயார்

Nutrition

Serving: 400gm | Calories: 653kcal | Carbohydrates: 34g | Cholesterol: 1.2mg | Sodium: 453mg | Potassium: 625mg | Sugar: 3.2g | Calcium: 12mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

55 நிமிடங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

4 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

4 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

5 மணி நேரங்கள் ago

குளு குளுனு சாக்லேட் வாழைப்பழ ஐஸ்கிரீம், வீட்டிலேயும் சுலபமாக இப்படி செய்ய அசத்துங்க!

வாழைப்பழம் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்தது. மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் குணமாக்கும் ஆற்றல் கொண்டது. அதேசமயம் ஐஸ்கிரீம் என்பது…

7 மணி நேரங்கள் ago

புத-ஆதித்ய யோகம்… ‘இந்த’ ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!

ஜோதிட உலகில் பிரமாண்டமாக பேசப்படும் யோகத்தில் ஒன்று புத ஆதித்திய யோகம். பல விதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் சூரியன்…

8 மணி நேரங்கள் ago