- Prep
- 20 min
- Cook
- 15 min
- Total
- 35 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner, LUNCH
தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் பெரிவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் படியாக சுவையான கொங்கு நாட்டு அரிசி பருப்பு சோறு செய்து சாப்பிட்டு பாருங்கள்.குழந்தைகள் முதல்
இதையும் படியுகள்: கிராமத்து ஸ்டைல் உளுந்தம் சோறு இப்படி செஞ்சி பாருங்க!
பெரியவர்கள் வரை உளுந்து சோறு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த கொங்கு நாட்டு அரிசி பருப்பு சோறு செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
அரசி பருப்பு சாதம் செய்ய முதலில் அரிசி, துவரம் பருப்பு நன்றாக கழுவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின் குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை வறுத்துக் கொள்ள வேண்டும்.
சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
கருவேப்பிலையை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஊற வைத்த அரிசி, பருப்பை அதில் சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும்,
அதில் அரிசி ஒரு கப்புக்கு 1.5 கப் தண்ணீர் விகிதம் என்ற அடிப்படையில் பருப்பும் சேர்ந்துள்ளதால் இரண்டரை கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். கலவைக்கு தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
குக்கரில் 3 விசில் வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.குக்கரை திறந்ததும் கொத்தமல்லி இலையை தூவ வேண்டும்.இப்பொழுது சுவையான அரிசி பருப்பு சாதம் தயார்






