கொத்தவரங்காய் பருப்பு உசிலி, இதுவரைக்கும் யாரும் இவ்வளவு ருசியா கொத்தவரங்காய் சமையலை சாப்பிட்டிருக்கவும் மாட்டீங்க. மிஸ் பண்ணாம செய்து பாருங்களேன்!!!

- Advertisement -

பொதுவாக கொத்தவரங்காய் என்று சொன்னால் பலருக்கு புரியாது. இந்த காய்க்கு கொத்தவரங்காய் என்றும் சீனி அவரைக்காய் என்றும் இரண்டு பெயர்கள் உண்டு. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரியாக இதன் பெயரை சொல்லி அழைப்பார்கள். ஆனால் இந்த காய் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். இந்த கொத்தவரங்காயில் பொரியல், குழம்பு என நிறைய செய்து சாப்பிட்டு இருப்போம்.

-விளம்பரம்-

ஆனால் பருப்பு உசிலி செய்து நிறைய பேர் சாப்பிட்டு இருக்க மாட்டார்கள். இந்த கொத்தவரங்காயில் பருப்பு சிலை செய்து காரக்குழம்பு புளிக்குழம்பு இதனுடன் சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். நீங்கள் இதுவரையில் இந்த பருப்பு உசிலியை முயற்சி செய்து பார்க்காமல் இருந்தால் இப்பொழுது நான் சொல்லப் போகும் செய்முறையின் படி உங்கள் வீட்டில் கொத்தவரங்காய் பருப்பு சரி செய்து பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -

காய்கறிகள் பிடிக்காத குழந்தைகளும் கூட இந்த பருப்பு உசிலியை சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் இதனுடைய சுவை மிகவும் பிடிக்கும். எப்பொழுதுமே ஒரே மாதிரியாக பீன்ஸ் கேரட் அவரைக்காய் உருளைக்கிழங்கு இதில் மட்டும் பொரியல் செய்து சாப்பிடாமல் ஒருமுறை கொஞ்சம் வித்தியாசமாக இந்த கொத்தவரங்காய் பருப்பு உசிலியை செய்து சாப்பிட்டு பாருங்கள் இதன் சுவை உங்களுக்கு மிகவும் பிடிக்கும். வாங்க இந்த கொத்தவரங்காய் பருப்பு உசிலய எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

கொத்தவரங்காய் பருப்பு உசிலி | Kothavarangai Usili

காய்கறிகள் பிடிக்காத குழந்தைகளும் கூட இந்த பருப்பு உசிலியை சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் இதனுடைய சுவை மிகவும் பிடிக்கும். எப்பொழுதுமே ஒரே மாதிரியாக பீன்ஸ் கேரட் அவரைக்காய் உருளைக்கிழங்கு இதில் மட்டும் பொரியல் செய்து சாப்பிடாமல் ஒருமுறை கொஞ்சம் வித்தியாசமாக இந்த கொத்தவரங்காய் பருப்பு உசிலியை செய்து சாப்பிட்டு பாருங்கள் இதன் சுவை உங்களுக்கு மிகவும் பிடிக்கும். வாங்க இந்த கொத்தவரங்காய் பருப்பு உசிலய எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Kothavarangai Paruppu Usili
Yield: 3
Calories: 153kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ கொத்தவரங்காய்
  • 4 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 4 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  • 3 காய்ந்த மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டேபிள் ஸ்பூன் சாம்பார் தூள்
  • 1/4 டேபிள் ஸ்பூன் பெருங்காயத் தூள்
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பு இரண்டு மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அந்த இரண்டு பருப்புகளையும் மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். அரைத்ததை ஒரு இட்லி தட்டில் வைத்து 15 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு ஆறியவுடன் நன்றாக உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் கொத்தவரங்காயை நறுக்கி சேர்த்துக் கொண்டு சாம்பார் தூள் உப்பு போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். கொத்தவரங்காய் நன்றாக வெந்த பிறகு தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்தவுடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பை சேர்த்து கிளறவும்.
  • பிறகு வேக வைத்துள்ள கொத்தவரங்காய் சேர்த்து நன்றாக கிளறி இறுதியாக தேங்காய் பூ சேர்த்து இறக்கினால் சுவையான கொத்தவரங்காய் பருப்பு உசிலி தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 153kcal | Carbohydrates: 20g | Protein: 7g | Fat: 6g | Sodium: 402mg | Fiber: 5g

இதையும் படியுங்கள் : ருசியான கிராமத்து ஸ்டைல் வாழைப்பூ பருப்பு உசிலி கூட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!