கொத்து பரோட்டா செய்றதுக்கு பரோட்டா இல்லையென்றால், பன்  வச்சு இந்த கொத்து பன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

- Advertisement -

கொத்து பன்னா அப்படின்னா என்னன்னு நிறைய பேரு யோசிச்சிட்டு இருப்பீங்க. கொத்து பரோட்டா கேள்வி பட்டு இருப்போம். அது என்னடா கொத்து அப்படின்னு யோசிக்கிறீங்களா. கொத்து பரோட்டா மாதிரியே தாங்க பரோட்டாவிற்கு பதிலாக பன் வச்சு நம்ம கொத்து பன் செய்ய போறோம். இந்த கொத்து பண்ண நம்ம காலை உணவாகும் சாப்பிடலாம். நைட்டுக்கு டின்னர் ஆகவும் சாப்பிடலாம். இதோட சுவை நம்ம வீட்ல அசைவம் செய்ற அதே சுவைலையும் வாசனைலையும் இருக்கும்.

-விளம்பரம்-

குழந்தைங்க கிட்ட இது கொத்து பரோட்டா அப்படின்னு சொல்லி ஏமாத்தி கூட கொடுக்கலாம் அவங்களும் நம்பிட்டு அத நல்லா சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு இது ஒரு சூப்பரான டிஷ்னே சொல்லலாம். இந்த டிஷ்ஷுக்கு எந்த சைட் டிஷ் நீ தேவை இல்லை அப்படியே சாப்பிடலாம் அவ்வளவு ருசியா இருக்கும். பன்னுலதான செய்றோம் இது எப்படி அவ்ளோ ருசியா இருக்கும் அப்படின்னு நீங்க யோசிக்கவே தேவையில்லை ஒரு தடவை நீங்க வீட்ல இதை செஞ்சு பார்த்தீங்க அப்படின்னா அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் உங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போயிடும் முக்கியமா குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்.

- Advertisement -

குழந்தைகள் வெளியில பீட்சா பர்கர் என்று கேட்டால் அத வாங்கி கொடுக்கிறத கம்மி பண்ணிக்கிட்டு இந்த மாதிரி நீங்க வீட்டிலேயே உங்களுக்கு செஞ்சு கொடுத்தீங்கன்னா அவங்க பீட்சா பர்கர் னு கேட்க மாட்டாங்க இதவே செஞ்சு தர சொல்லி சாப்பிடுவாங்க. இந்த கொத்து பன் செய்வதற்கு தயமும் நிறைய ஆகாது மிகவும் குறைவான நேரத்திலேயே சீக்கிரமாகவே இதை செஞ்சு முடிச்சிடலாம். இந்த கொத்து பல்ல நம்ம முட்டையும் போட்டு செய்றதால இதோட ருசி இன்னுமே ரொம்ப சூப்பராவே இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
4 from 1 vote

கொத்து பன் | Kothu Bun Recipe In Tamil

கொத்து பன்னா அப்படின்னா என்னன்னு நிறைய பேரு யோசிச்சிட்டுஇருப்பீங்க. கொத்து பரோட்டா கேள்வி பட்டு இருப்போம். அது என்னடா கொத்து அப்படின்னுயோசிக்கிறீங்களா. குழந்தைகள் வெளியில பீட்சா பர்கர் என்று கேட்டால் அத வாங்கி கொடுக்கிறத கம்மி பண்ணிக்கிட்டு இந்தமாதிரி நீங்க வீட்டிலேயே உங்களுக்கு செஞ்சு கொடுத்தீங்கன்னா அவங்க பீட்சா பர்கர் னுகேட்க மாட்டாங்க இதவே செஞ்சு தர சொல்லி சாப்பிடுவாங்க. இந்த கொத்து பன் செய்வதற்கு நேரமும் நிறைய ஆகாது மிகவும் குறைவான நேரத்திலேயே சீக்கிரமாகவே இதை செஞ்சு முடிச்சிடலாம்.இந்த கொத்து பல்ல நம்ம முட்டையும் போட்டு செய்றதால இதோட ருசி இன்னுமே ரொம்ப சூப்பராவே இருக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Course: dinner, Snack
Cuisine: tamil nadu
Keyword: Kothu Bun
Calories: 123kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 பன்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 2 முட்டை
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 பிரிஞ்சி இலை
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

செய்முறை

  • முதலில் பன்னை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதன் மேல் லேசாக தண்ணீர் தெளித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயில் நெய் ஊற்றி இலை போட்டு தாளித்துக் கொள்ளவும். பிறகு அதில்வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும் அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
  • தேவையான அளவு உப்பு கரம் மசாலா மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
  • அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் அதை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக வதக்கவும். அனைத்தும் சேர்ந்து ஒரு ஐந்து நிமிடங்கள் வதங்கிய பிறகு வெட்டி வைத்துள்ள பன் சேர்த்து கிளறவும்.
  • இறுதியாக கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் சுவையான கொத்துபன் தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 123kcal | Carbohydrates: 21g | Fat: 2g | Cholesterol: 6mg | Sodium: 321mg | Potassium: 543mg | Calcium: 5.4mg