Advertisement
சைவம்

மதிய உணவுக்கு இப்படி ஒரு தரம் குடைமிளகாய் பொரியல் செய்து பாருங்க பின் அடிக்கடி நீங்களே செய்வீங்க!

Advertisement

என்ன தான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் சாப்பிடுவதற்கு ஏதாவது கூட்டு ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம். இல்லையென்றால் அரை குறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு

இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற கடப்பா கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி ?

Advertisement

பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த குடைமிளகாய் பொரியல் செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவருக்கும் பிடிக்கும். நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும். ஆகையால் இன்று இந்த குடைமிளகாய் பொரியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

குடை மிளகாய் பொரியல் | Kudai Milagai Poriyal Recipe in Tamil

Print Recipe
சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் சாப்பிடுவதற்கு ஏதாவது கூட்டு ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம். இல்லையென்றால் அரை குறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த குடைமிளகாய் பொரியல் செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவருக்கும் பிடிக்கும். நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword kudai milagai, குடைமிளகாய்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 237

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 3 குடைமிளகாய் நறுக்கியது
  • 3 tbsp எண்ணெய்
  • ½ tsp கடுகு
  • ½ tsp உளுந்தப்பருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 பெரிய வெஙனகாயம் பொடியாஙநறுக்கியத
  • 3 tbsp பொட்டுகடலை
  • ½ tsp மஞ்சள் தூள்
  • 1 tsp மிளகாய்தூள்
  • 1 tsp மல்லி தூள்
  • உப்பு தேவைபான அளவு

Instructions

  • முதலில் நாம் வைத்திருக்கும் குடைமிளகாயின் உட்பகுதியை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். இதனுடன் வெங்காயத்தையும் சிறிதாக
    Advertisement
    நறுக்கி கொள்ளுங்கள். அதன் பின்பு மூன்று டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்
  • பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடுகு, உளுந்த பருப்பு சேர்த்து தாளிக்கவும், பின் கடுகு நன்கு பொரிந்தவுடன்.
  • நாம் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்ததும். இதனுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீ ஸ்பூன் மிளகாய்தூள் மற்றும் அரை டீஸ்பூன் மல்லிதூள் சேர்த்து கிளறவும்.
  • பின் மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் நாம் நறக்கி வைத்திருக்கும் குடமிளகாய் மற்றும் தேயைான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கடாயை மூடி வைத்து வதக்கி விடுங்கள்.
  • பின் குடைமிளகாய் முக்கால்வாசி நன்கு வதங்கி வந்ததும் நாம் பொடித்து வைத்திருக்கும் பொட்டு கடலைப் பொடியை சேர்த்து கிளறி விட்டு இரண்டு நிமிடம் வதக்கி கடாயை இறக்கவும். அவ்வளவுதான் சவையான குடைமிளகாய் பொராயல் தயார்.

Nutrition

Serving: 650gram | Calories: 237kcal | Carbohydrates: 34g | Protein: 21g | Fat: 2g | Saturated Fat: 0.5g | Cholesterol: 10mg | Sodium: 6mg | Potassium: 471mg | Fiber: 8g | Sugar: 3.4g | Calcium: 21mg | Iron: 2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

36 நிமிடங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

46 நிமிடங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

57 நிமிடங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

2 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

2 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

6 மணி நேரங்கள் ago